ஜெ.வை எதிர்த்து அரசியலுக்கு அறிமுகமான வசந்தி தேவிக்கு டெபாசிட் காலி!
சென்னை: சென்னை ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து களமிறங்கிய விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் கல்வியாளர் வசந்தி தேவி குறைந்த வாக்குகளுடன் பரிதாபத் தோல்வி அடைந்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் கல்வியாளர் வசந்தி தேவியை பொது வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

தமிழக சட்டசபைத் தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துசோழன் களம் இறக்கப்பட்டார்.
இவர்களை எதிர்த்து தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக கல்வியாளர் வே.வசந்தி தேவி நிறுத்தப்பட்டார்.
அரசுக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய இவர், கடந்த 1992 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பதவி வகித்தவர். தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு அவருக்கு மேலும் 3 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
அப்போது புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்த வசந்தி தேவி, தமிழகத்திலேயே முதன் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள்களின் நகல்களை பெறும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
கல்விக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள வசந்திதேவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களது வேட்பாளராக அறிவித்தது சமூகவலைதளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவரை ஜெயலலிதாவை எதிர்த்து பொது வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இந்நிலையில், இன்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா 39,537 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற வாக்குகள் 96,269 ஆகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் 56,732 வாக்குகள் பெற்றார்.
ஆனால், பலத்த பரபரப்புகளுக்கு இடையில் அரசியலுக்கு அறிமுகமான வசந்தி தேவிக்கு 4195 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. மிகக்குறைந்த வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்துள்ளார் வசந்தி தேவி.
இந்தத் தொகுதியில் நோட்டாவுக்கு 2873 வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகத் தொகுதியிலேயே அதிகபட்சமாக ஆர்.கே.நகரில் மட்டுமே 45 வேட்பாளர்கள் களமிறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications