எச்.ராஜா உருவ பொம்மையை எரித்த விடுதலைச் சிறுத்தைகள்
சென்னை: திருமாவளவனை அவதூறாகப் பேசிய பாஜக செயலாளர் எச் ராஜாவின் உருவப் பொம்மையை எரித்து எதிர்ப்பைத் தெரிவித்தனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.
சுவாதி கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கெளரி சங்கர் தலைமையில் இன்று காலை கொரட்டூர் டி.வி.எஸ். லுக்காஸ் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் கொரட்டூர் போலீசார் விரைந்து சென்று எரிந்து கொண்டு இருந்த உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின்னர் போலீசார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.












Click it and Unblock the Notifications