2016 சட்டசபை தேர்தலுக்குள் புதிய டிவி சேனல் துவங்கும் திருமாவளவன்
சென்னை: 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு என்று தனியாக தொலைக்காட்சி சேனல் துவங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடக மையம் சென்னை அசோக் நகரில் உள்ள 100 அடி சாலையில் கட்டப்பட்டுள்ளது. வெளிச்சம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த 3 அடுக்கு மாடி கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

கட்டிடத்தின் நிலவொளி என்று பெயரிடபப்பட்ட முதல் மாடியை கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் திறந்து வைத்தார். கதிரொளி என்ற 2வது மாடியை
மற்றொரு பொதுச் செயலாளர் ரவிக்குமார், அரவொளி என்ற 3வது மாடியை பொருளாளர் முகமது யூசுப் ஆகியோர் திறந்து வைத்தனர்.
கட்டிடத்தில் உள்ள மார்பளவு அம்பேத்கார் சிலையை திறந்து வைத்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எந்த கட்சிக்கும் ஊடக மையம் இல்லாத நிலையில் முதன்முதலாக எங்கள் கட்சிக்காக அமைத்துள்ளோம். கட்சிக்கு என தனியாக தொலைக்காட்சி சேனல் துவங்கும் திட்டம் உள்ளது. அதன் முன்னோட்டம் தான் இந்த ஊடக மையம்.
அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக எங்கள் கட்சிக்கு என தனியாக தொலைக்காட்சி சேனல் துவங்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications