விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒடுக்கப்பட்டோர் அனைவருக்குமான இயக்கம்: திருமாவளவன்
விருத்தாசலம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கான இயக்கம் அல்ல. ஒடுக்கப்பட்ட அனைவருக்குமான இயக்கம், யாருக்காவும் போராடக்கூடியது என அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விருத்தாசலத்தில் ஏற்கனவே இருந்த அம்பேத்கார் சிலையை மாற்றி, புதிய வெண்கல சிலை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி சிலையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாநில நிர்வாகிகள் இளமாறன், திருமாறன், திருமார்பன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் அய்யாவரம் வரவேற்றார்.

சிலையை திறந்து வைத்து, விழாவில் திருமாவளவன் பேசியதாவது :
கடலூர் மாவட்டத்திலேயே முதன் முதலில் நிறுவப்படுகின்ற முதல் வெண்கல சிலை விருத்தாசலத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மற்ற இடங்களில் உள்ள அனைத்து சிலைகளும் வெண்கல சிலைகளாக மாற்ற நமது நிர்வாகிகள் முன்வருவார்கள் என நான் நம்புகிறேன்.
வெண்கல சிலை
நெய்வேலியில் வெண்கலத்தால் ஆன அம்பேத்கார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நெய்வேலியை நாம் சேர்த்துக்கொள்ள முடியவில்லை. அது ஒரு தனி பிரதேசமாக உள்ளது.
அம்பேத்கார்...
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்குமான தலைவர் அம்பேத்கார். இதை மக்கள் புரிந்து கொள்ள இன்னும் பல ஆண்டுகள் தேவைபடும். 50 ஆண்டுகளுக்கு முன்பு அவரை ஒரு சராசரி தலைவராகதான் எல்லோரும் பார்த்தார்கள். 1991-ல் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது ராம்விலாஸ் பஸ்வான் அமைச்சராக இருந்த காலத்தில்தான் அம்பேத்காரின் சிந்தனைகளை, பேச்சுகளை, எழுத்துகளை இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய ஆணை பிறப்பித்தார். அதன் பிறகுதான் அவர் இந்திய அளவில், உலக அளவில் போற்றக்கூடிய தலைவராக அறியப்பட்டார்.
இட ஒதுக்கீடு...
இந்தியாவில் தமிழகத்தில் தான் 69 சதவீத இட ஒதுக்கீடு இருந்து வருகிறது. இதில் அகில இந்திய அளவில் கல்வி, வேலைவாய்ப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை தாண்டக்கூடாது என்ற உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பு அளித்துள்ளது. தமிழகத்தில் 69 சதவீதம் என்பது தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மக்களுக்கு 19 சதவீதம், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவீதம் என்கிற நிலையில் இருந்து வருகிறது. இவை எந்த அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. இதை பாதுகாக்கும் வகையில் அனைத்து கட்சியினர் கூடி ஆலோசித்தோம்.
சாதிக்கான கட்சியில்லை...
விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பது தலித் அல்லாத மக்களுக்கு எதிராக சிந்தித்தும் இல்லை, யாரையும் பகையாகவும் பார்த்ததும் இல்லை. எந்த ஒரு சமுதாயத்திற்கும் நாங்கள் தீங்கு விளைவித்தது இல்லை. இது சாதிக்கான இயக்கமும் அல்ல. ஒடுக்கப்பட்ட அனைவருக்குமான இயக்கம், யாருக்காவும் போராடக்கூடியது. டாக்டர் அம்பேத்கார் வழியில் போராடி வரும் கட்சியான விடுதலை சிறுத்தைகள் அனைவரிடத்திலும் நல்லிணக்கம் பெற்றுள்ளது
வாழ்த்து...
நெய்வேலி என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 28 நாட்களை கடந்து கோரிக்கைகளை நிறைவேற்றகோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது போராட்டத்திற்கு என்றென்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை நிற்கும், எனவே அவர்களை வரவேற்று ஆதரிப்பதுடன் அவர்களது போராட்டம் வெல்வதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications