சோழிங்கநல்லூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆறுதல்
சென்னை : சென்னை சோழிங்கநல்லூர், செம்மஞசேரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் சோழிங்கநல்லூர், செம்மஞசேரி, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அந்த பகுதிகளில் வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டு செம்மஞசேரி தோப்பு அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல, சுனாமி நகர் குடியிருப்புப் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது. அங்குள்ளவர்கள் அரசுபள்ளியில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறது. சோழிங்கநல்லூர் மேடவாக்கம் சாலை சுங்கசாவடி அருகே அதிக அளவு வெள்ளம் செல்வதால் நேற்று 3-வது நாளாக அந்த சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளானார்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோழிங்கநல்லூர் காந்தி நகர், செம்மஞசேரி சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களின் குறைகளை கேட்டறிந்து உணவு பொட்டலங்களை வழங்கினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications