பாமகவுக்கு எதிர்ப்பு?: கூட்டணிக்காக திமுகவுடன் ஆயுள்கால ஒப்பந்தம் போடவில்லை: திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: திமுக கூட்டணியில் தொடர்ந்து இருப்போம் என ஆயுள்கால ஒப்பந்தம் எதுவும் போடவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

இலங்கையில் புதன்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் இந்திய வம்சா வழி மலையக தமிழர்கள் 300 பேர் இறந்துள்ளனர். இப்பகுதியை இந்திய பிரதமர் நேரில் பார்வையிட்டு, இறந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான வீடுகள் கட்டித்தர இந்திய அரசு உதவ வேண்டும்.

VCK not sign lifelong poll allaince with DMK

கொள்கைகளில் முறண்பாடு இருந்தாலும் வடஇந்தியாவில் குறிப்பாக டெல்லியில் மாற்று கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பது வழக்கமான நடைமுறை. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பகைமை இல்லாத தலைவர்கள் கூட மாற்று அணிகளில் இருந்தால் ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்ப்பது வேதனை அளிக்கிறது.

இதை கடந்து காதணி நிகழ்ச்சி, திருமணம், தேநீர் நிகழ்ச்சிகளில் தலைவர்கள் சந்திக்கும் சூழ்நிலை தமிழகத்தில் வர வேண்டும். திமுகவும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் ஆயுள்காலமும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை.

தேர்தல் நேரத்தில் அப்போதைய நிலையை பொறுத்து தலைவர்கள் கூட்டணி முடிவை எடுப்பது வழக்கம். திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா? என்பது பற்றி இப்போது கருத்து சொல்ல தேவையில்லை.

இவ்வாறு தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் திமுக கூட்டணிக்கு பாமக வருவதை திருமாவளவன் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+