மாரியம்மாள் புதிய புறநானூற்று தாய்.. வைகோ தாயார் மறைவுக்கு விடுதலை சிறுத்தை புகழஞ்சலி
சென்னை: ஈன்று புறந் தருதல் மட்டுமின்றி சான்றோனாக்கி, வேல் எடுத்துக் கொடுத்துப் போராளியாக வளர்த்தெடுப்பதும் தாயின் கடமைதான் எனப் புதிய புறநானூற்றுத் தாயாகத் திகழ்ந்தவர் அன்னை மாரியம்மாள் என்று வைகோவின் தாயார் மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரவிக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதிமுகவின் பொதுச்செயலாளரும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணப்பாளருமான திரு வைகோ அவர்களின் அன்னையார் மாரியம்மாள் அவர்கள் இன்று காலை உயிர் நீத்தார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.
ஒரு மாதத்துக்கு முன்னர் கலிங்கப்பட்டியில் வைகோ அவர்களின் உதவியாளர் சந்துரு அவர்களின் இல்லத் திறப்புவிழாவுக்குச் சென்றிருந்தபோது அன்னையாரை சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
ஈழத்துக்கான போராட்டங்களிலும், மது ஒழிப்புப் போராட்டக் களங்களிலும் தனது வயதைப் பொருட்படுத்தாமல் முன்னணியில் நின்றவர் அன்னை மாரியம்மாள் அவர்கள். வைகோ, அவர்களது உணர்வின் ஊற்று, உள்ளுறை ஆற்றல் அன்னை மாரியம்மாள் அவர்கள்தான் என்பதை அவரோடு பழகியவர்கள் அறிவார்கள்.
ஈன்று புறந் தருதல் மட்டுமின்றி சான்றோனாக்கி, வேல் எடுத்துக் கொடுத்துப் போராளியாக வளர்த்தெடுப்பதும் தாயின் கடமைதான் எனப் புதிய புறநானூற்றுத் தாயாகத் திகழ்ந்தவர்.
அன்னை மாரியம்மாள் அவர்களுக்கு என் அஞ்சலி. அவரை இழந்து வாடும் அண்ணன் வைகோ அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தனித் தமிழீழம் அடைவதும், தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதும் அன்னை மாரியம்மாள் அவர்களின் நிறைவேறாக் கனவுகள். அவற்றை நிறைவேற்ற உறுதியோடு உழைப்பதே அவருக்கான பொருள் பொதிந்த அஞ்சலியாக இருக்கும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications