பாஜக மீது ஸ்டாலினுக்கு கோபம் இப்போதாவது வந்துள்ளதே... வரவேற்கும் விசிக
பாஜகவை கடுமையாக விமர்சித்த ஸ்டாலினின் பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: பாஜகவை இப்போதாவது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காட்டமாக விமர்சித்திருக்கிறாரே என விடுதலைச் சிறுத்தைகள் மகிழ்ச்சியைவ் வெளிப்படுத்தியுள்ளது.
கடலூரில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அக்கூட்டத்தில் பாஜகவை களவாணிப் பசங்க, புறம்போக்குகள் என கடுமையாக வெளுத்துவிட்டார் ஸ்டாலின்.

எதிர்முகாம் மகிழ்ச்சி
ஸ்டாலினின் இந்த ஆவேச பேச்சு பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதே நேரத்தில் இந்துத்துவா எதிர்பாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். டிவி விவாதம் ஒன்றில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு கூறியதாவது:

கோபத்தின் வெளிப்பாடு
ஆண்டாள் பிரச்சனையில் பாஜகவின் எச். ராஜா மிக மோசமாக பேசியிருக்கிறார். அதற்கு முன்னர் ட்விட்டரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை ரவுடிகள், பொறுக்கிகள் என விமர்சித்திருக்கிறார் எச். ராஜா. இப்படி பாஜகவினர் தொடர்ந்து பேசியதன் வெளிப்பாடுதான் ஸ்டாலினின் கோபம்.

சுயமரியாதையை சீண்டியதால்
ஸ்டாலின் இப்போதாவது இவ்வளவு கோபப்பட்டு பேசுகிறார் என மகிழ்ச்சியைத் தருகிறது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இந்த மூன்றையும் விட முக்கியமானது சுயமரியாதை.

இளைஞர்கள் எழுச்சி பெறுவர்
இந்த சுயமரியாதையை சீண்டியதால்தான் ஸ்டாலின் இப்படி பேசினார். ஸ்டாலினின் இந்த பேச்சு பாராட்டுக்குரியது. வரவேற்புக்குரியது. ஸ்டாலினின் இந்த பேச்சு இளைஞர்களை எழுச்சி பெற வைக்கும்.
இவ்வாறு வன்னியரசு கூறினார்.
-
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன?












Click it and Unblock the Notifications