ஹைட்ரோ கார்பன் ஒப்பந்தம் கையெழுத்தானது.. தமிழகத்தில் 2 இடத்தில் வேதாந்தா.. ஒன்றில் ஓஎன்ஜிசி
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம்.
சென்னை: தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம்.
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் மீண்டும் உயிர்பெற்று இருக்கிறது. நெடுவாசலில் இருந்து அகற்றப்பட்ட இந்த திட்டம் இப்போது வேறு மூன்று இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதில் வேதாந்தா நிறுவனம்தான் அதிக இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மொத்தம் எத்தனை இடங்கள்
இந்தியா முழுக்க மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. 41 இடங்களில் வேதாந்தா நிறுவனம்தான் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. மீதமுள்ள இடங்களில் 4 நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்கிறது. இதில் தமிழகத்தில் மொத்தம் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கபட உள்ளது.

இரண்டாக பிரித்து
தமிழகத்தில் மூன்று இடங்களில் இரண்டு இடங்களில் வேதாந்த நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்கும். ஒரு இடத்தில் ஓ.என்.ஜி.சி ஹைட்ரோ கார்பன் எடுக்கும். இதற்கான ஆய்வு பணிகள் விரைவில் தொடங்கும்.

நாகை
இந்த முறை நாகை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட இருக்கிறது. இரண்டு இடங்களில் நாகையில் எடுக்கப்பட உள்ளது. இன்னொரு இடம் இன்னும் முடிவாகவில்லை. நாகையில் எங்கு எடுக்கப்பட உள்ளது என்று அறிவிப்பு வெளியாகவில்லை.

எவ்வளவு ஒப்பந்தம்
மத்திய அரசிடம் இதற்காக மொத்தமாக 3934 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது வேதாந்தா நிறுவனம். பாஜகவை சேர்ந்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications