கலங்க வைக்கும் காய்கறிகள், பதறவைக்கும் பழங்கள்...
சென்னை: சின்ன வெங்காயம் கிலோ 80 ரூபாய், பெரிய வெங்காயம் கிலோ 40 ரூபாய், தக்காளி கிலோ 30 ரூபாய், ஒரு காலிப்ளவர் விலை 70 ரூபாய், ஆப்பிள் கிலோ 200 ரூபாய் என சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் விலை உயர்ந்துள்ளன. கடைக்குப் போய் விலை கேட்டு விட்டு வாங்கவும் முடியாமல், திரும்பவும் முடியாமல் திண்டாடுகின்றனர் நுகர்வோர்கள்.
சென்னையில் மொத்த காய்கறிகள் விற்பனை செய்யும் கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. விளைச்சல் குறைந்து போனதே காய்கறிகள் விலை உயர்வுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், பெரியபாளையம், திருவண்ணாமலை, ஓசூர் பகுதியில் இருந்து அதிக அளவில் காய்கறி வரும். ஆனால் கடந்த சில நாட்களாக போதிய விளைச்சல் இல்லாததால் காய்கறி வரத்து குறைந்து விட்டது.

வெளிமாநில காய்கறிகள்
தமிழகத்தில் காய்கறிகளின் விளைச்சல் குறைந்து போனதால், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து காய்கறிகள் சென்னை கோயம்பேடு சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. இதனால் காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது.

வெங்காயம் ரூ.80
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனைத்து காய்கறிகளின் விலையும் ரூ.30க்குள் விற்கப்பட்டது. ஆனால் இப்போது விலை கிடுகிடு என உயர்ந்து விட்டது. சின்னவெங்காயம் கிலோ 70 முதல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விண்ணை முட்டும் விலைகள்
ஒரு காலிப்ளவர் விலை ரூ.70 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ரூ.30க்கு விற்கப்பட்ட அவரைக்காய் விலை தற்போது ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரட், பீன்ஸ், இஞ்சியின் விலையும் விண்ணை முட்டும் விதமாக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பழங்கள் விலை உயர்வு
இதேபோல் பழங்கள் விலையும் உயர்ந்துள்ளது. ஆப்பிள் பழம் கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்கப்படுகிறது. ஆரஞ்சு பழம் கிலோ ரூ.80க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.40க்கும் விற்கப்படுகிறது.

மழைகுறைவு விலை உயர்வு
செவ்வாழை 1 பழம் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கிறார்கள். கொய்யாபழம் கிலோ ரூ.20க்கு விற்கப்படுகிறது. மழை சரிவர பெய்யாததால் விளைச்சல் பாதிக்கப்பட்டு அதனால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications