Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெய்சிலிர்க்குதே.. வேளாங்கண்ணி மாதா பேராலய கொடியேற்றம் இன்று துவங்குகிறது.. விழாக்கோலத்தில் நாகை

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி வேளாங்கண்ணியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

வருடா வருடம் இந்த பேராலயத்தில் பெருவிழா நடப்பது வழக்கம்.. அந்தவகையில், ஆகஸ்ட் மாதம் 29 -ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாள்கள் விழா நடைபெறும்...

Velankanni Arogya Annai Temple Annual Festival Today flagging and What are the Special Arrangements

இந்த நாள்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல நூறு கி.மீ. தூரம் நடைபயணமாகவே அன்னையின் அருளாசியை பெற திரண்டு வருவார்கள்.. ஆனால், கடந்த 2 வருடமாகவே, கொரோனா காரணத்தினால், பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்த்து.

பக்தர்கள்: இந்த வருடம் எந்த தடையும் இல்லாத சூழலில், பக்தர்கள் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் திரண்டு வந்துள்ளனர்.. இன்று மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார்.

பிறகு, கொடி ஊர்வலம் நடைபெற்று கொடியேற்றம் நடைபெறும்... இதையடுத்து, திருத்தலக் கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றுதல் போன்றவை தொடர்ந்து நடைபெறும்.

வரும் 30 -ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 7-ம் தேதிவரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம், பேராலயத்தின் மேல்கோயில், பேராலயத்தின் கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் இரவு பகலாக வழிபாடுகள் நடைபெறும்... வரும் 2 -ம் தேதி மாலை சிலுவைபாதை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

தேர்பவனி: 7 -ம் தேதி திருத்தல கலையரங்கத்தில் தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் நடக்கும்.. 8 -ம் தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு, திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படும். அன்றிரவு 8 மணிக்குப் பெரிய தேர்பவனி நடைபெறுகிறது.

இந்த விழாக்களையொட்டி, பேராலயம் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு, அலங்கார மின் விளக்குகளால் ஜோடிக்கப்பட்டுள்ளது.. எப்படியும் இந்த பெருவிழாவிற்கு சுமார் 20 லட்சம் பக்தர் வருவார்கள் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதால், அடிப்படை வசதிகளை பேராலய நிர்வாகம் மற்றும் வேளாங்கண்ணிப் பேரூராட்சி, காவல்துறையினர் இணைந்து செய்திருந்தனர்.

கண்காணிப்பு கோபுரம்: பக்தர்களுக்கு சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தற்காலிகக் கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சில ரெயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

27 உயர் கண்காணிப்பு கோபுரம், 4 ஆளில்லா விமானம் ( Drone Camera) 760 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகையால், வேளாங்கண்ணியில் உள்ள ஓட்டல்கள், லாட்ஜ்கள், பஸ் ஸ்டாண்டு, ஓட்டல்கள், கடைவீதி ஆகிய இடங்களில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+