ஜோலார்பேட்டை வனிதா தெரியுமா? லாட்ஜில் ரூம் போட்டு "பக்கா ஸ்கெட்ச்".. திகிலில் வேலூர், திருப்பத்தூர்
திருப்பத்தூர்: கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக, ஒரு கொலையே நடந்துள்ளது.. இது குறித்த விசாரணையை வேலூர் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்துள்ளது பலக்கல் பாவி முருகன் கோவில்.. இங்குள்ள மலையடிவாரத்தில் ஆடுமேய்ப்பவர்கள், தங்கள் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வருவது வழக்கம்..

ஈக்கள்: அந்தவகையில், கடந்த 21ம் தேதி, ஆடு மேய்க்க சென்றிருக்கிறார்கள்.. அப்போது, ஒரு பள்ளத்திலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது.. அந்த பள்ளம் அரைகுறையாக மூடப்பட்டிருக்கிறது.. அதன்மீது ஈக்கள் மொய்த்திருக்கின்றன.. இதனால், அந்த ஆடு மேய்ப்பவர்கள், கிராமத்துக்குள் வந்து, அம்மக்களிடம் தெரிவித்தனர். இதனால், கிராமமக்களும், விரைந்து சென்று பார்த்தபோது, யாரையோ, மண்ணுக்குள் புதைத்தது போல தெரியவந்துள்ளது.
உடனே திம்மாம்பேட்டை போலீஸாருக்கும், நாட்றம்பள்ளி தாசில்தாருக்கும் பொதுமக்கள் தகவல் அளிக்கவும், அவர்கள் விரைந்து வந்தனர். அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது, ஆணின் சடலம் இருந்துள்ளது.. 30 வயதிருக்கலாம் என்கிறார்கள்..
சடலம்: உடம்பில் துணி இல்லை.. நிர்வாணமாகவே புதைத்துள்ளனர்.. இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீஸார், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. விசாரணையையும் துவங்கினர். ஆனாலும், போலீசாருக்கு எந்த க்ளூவும் கிடைக்கவில்லை..
இப்படியே 10 நாட்கள் ஆகிவிட்டது.. ஒரு துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறிய நிலையில், போஸ்ட் மார்ட்டம் முடிந்து, அவரது உடலையும் அடக்கம் செய்துவிட்டனர். இப்படிப்பட்ட சூழலில், கடந்த 1ம் தேதி, சுண்ணாம்புகாரகொள்ளை பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், திம்மாம்பேட்டை போலீசில் புகார் ஒன்றை கொண்டு வந்தார்..
காணவில்லை: அதில், தன்னுடைய மகன் விஜயகுமாரை, 20 நாட்களாக காணவில்லை என்றும், கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணையை துவங்கினர். அப்போதுதான், மண்ணில் புதைக்கப்பட்டதுதான், விஜயகுமார் என்பது தெரியவந்தது... விஜயகுமருக்கு கல்யாணமாகிவிட்டது. மனைவி பெயர் வனிதா.. 25 வயதாகிறது.. 11 மாதத்தில் ஒரு கைக்குழந்தை உள்ளது..
தம்பதிக்குள் கருத்துவேறுபாடு காரணமாக, அடிக்கடி தகராறு வந்துள்ளது.. இதனால், தீபாவளியை சாக்கு வைத்து, ஆந்திராவிலுள்ள அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டாராம் வனிதா.
திருப்பத்தூர்: எனவே, இறந்துபோன விஜயகுமாரின் செல்போனை ஆய்வு செய்தனர்.. அவருடன் கடைசியாக பேசியது அவருடைய நண்பர் திருப்பத்தூர் ராகவேந்திரன் என்பது தெரியவந்தது. ராகவேந்திரனின் போனை ஆராய்ந்தால், வனிதாவிடம் பலமுறை பேசியது தெரியவந்துள்ளது. இதற்கு பிறகுதான், விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார் வனிதா.
வனிதாவுக்கும் விஜயகுமாரின் நண்பர் ராகவேந்திரனுக்கும் கள்ள உறவு இருந்திருக்கிறது.. கடந்த 15ம் தேதிகூட, இருவரும், ஜோலார்பேட்டை லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள்.. அந்த ரூமில்தான், இந்த கொலை திட்டம் தீட்டப்பட்டுள்ளது.. கணவர் இருக்கும்வரை தன்னால் நிம்மதியாக இருக்க முடியாது என்றும், எப்படியாவது கொன்றுவிடும்படியும், ஐடியா தந்துள்ளார் வனிதா.,
வனிதா: இதற்கு பிறகு, கடந்த 19ம் தேதி ராகவேந்திரன், விஜயகுமாருக்கு போன் செய்து, தண்ணி அடிக்கலாம் என்று கூப்பிட்டுள்ளார்.. விஜயகுமாரும் கிளம்பி வரவும், 2 பேரும் பலக்கல்பாவி மலைக்கு பக்கத்தில் உட்கார்ந்து மது அருந்தியுள்ளனர்.. விஜயகுமார் மதுபோதை தலைக்கு ஏறி மயங்கி விழுந்துள்ளார்.. அதற்கு பிறகு, அவரை அங்கேயே குழி தோண்டி புதைத்துவிட்டு கிளம்பிவிட்டாராம் ராகவேந்தர்.. இப்போது, ராகவேந்திரனையும், அவரது நண்பர் சங்கர் என்பவரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
ஆனால், இதுக்கெல்லாம் காரணமான வனிதா நிலைமை என்னவென்று உறுதியாக தெரியவிலலை.. கைதாகி விட்டாரா? விசாரணையின் பிடியில் உள்ளாரா? என்பது தெரியவில்லை.. ஆனால், கள்ளக்காதல் உறவு, கொலை திட்டம் தீட்டியது, இவைகளிலும் வனிதாவின் பங்கு இருக்கிறதுதானே???
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications