சுட்டெரிக்கும் கத்தரி வெயில்: வேலூரி்ல் 106 டிகிரி - 13 இடங்களில் சதமடித்தது
சென்னை: தமிழகம், புதுவையில் நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இது, மே 29ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்திரி வெயில் காலம் நடைபெற்று வருவதால், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கன மழை பெய்ததால், ஒரு வார காலம் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் நிம்மதி அடைந்தனர். காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆந்திரத்தை நோக்கி நகர்ந்ததையடுத்து, மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.
கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களிலும் புழுக்கம் காணப்படுகிறது. இந்த நிலையில், இன்னும் சில நாள்களுக்கு இதே நிலையில் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது:
சராசரி வெப்ப நிலை 104 டிகிரியாக பதிவாகும். இருப்பினும் ஓரிரு இடங்களில் வெப்பச் சலனத்தின் காரணமாக மழை பெய்யக் கூடும். சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றனர்.
பல நகரங்களில் செவ்வாய்க்கிழமை பதிவான வெப்ப அளவு (ஃபாரன்ஹீட்டில்):
வேலூர் 106
மதுரை, சென்னை 105
புதுச்சேரி, திருச்சி 104
சேலம், பரங்கிப்பேட்டை, பாளையங்கோட்டை 103
கடலூர் 102
நாகப்பட்டினம், காரைக்கால், தருமபுரி 101
திருப்பத்தூர் 100
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications