விவசாயிகள் மரணத்தை வேடிக்கை பார்ப்பதா? வறட்சி மாநிலமாக அறிவியுங்கள் - தி. வேல்முருகன்
விவசாயிகள் மரணத்தை ஆள்பவர்கள் வேடிக்கை பார்க்கின்றனர் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் பண்ருட்டி வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: விவசாயிகள் தற்கொலையை வேடிக்கை பார்க்கும் மத்திய மாநில அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி இன்று சென்னையில் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது. ஆர்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் வேல்முருகன், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக சாடினார்.
விவசாயிகள் மரணத்தைக் கொச்சைப்படுத்திய அமைச்சர் சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்தார். விவசாயிகள் மரணம் பற்றி தெளிவற்ற முறையில் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நாடராஜனை கடுமையாக சாடிய வேல்முருகன், வெல்லமண்டியா? வெங்காய மண்டியா பேரைப்பாருங்க என்றார்.

இன்றைக்கு தமிழகத்தை ஆளும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒதுக்கப்பட்டுள்ளார். ஒரு ஓரத்தில் நிற்க வைக்கப்படுகிறார். அவர் வெறும் தலையாட்டி பொம்மையாக இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்து போட்டுவிட்டது. இனி மின்சார கட்டணம் 3 மாதத்திற்கு ஒருமுறை உயர்த்தப்படும் என்றார் வேல்முருகன். இதே போல நீட் தேர்வு இனி நடத்தப்படும். இதனால் தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் நகரத்தில் வசிப்பவர்களுடன் போட்டி போட முடியாது என்றும் கூறினார்.
தமிழகத்தில் வறட்சியினால் ஏராளமான விவசாயிகள் மரணமடைந்து விட்டனர். விவசாயிகள் மரணத்தை ஆள்பவர்கள் வேடிக்கை பார்க்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார் வேல்முருகன்.
கர்நாடகா மற்றும் மத்திய அரசுகளின் வஞ்சகத்தாலும் தமிழகத்தில் விவசாயம் பொய்த்து போய்விட்டது. காவிரி டெல்டாவில் மட்டுமின்றி தென்மாவட்டங்களில் தாண்டவமாடும் வறட்சியின் கோரப்பிடியை தாங்க முடியாமல் விரக்தியில் இதுவரை ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும் அதிர்ச்சியிலும் உயிரிழந்து விட்டனர்.
ஆகையால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக பிரகடனப்படுத்த வேண்டும். உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் தர வேண்டும். விவசாயிகள் குடும்பங்களின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications