நா. முத்துக்குமாரின் மரணம்.. தமிழ்ச் சமூகத்திற்குப் பெருந்துயரம்... வேல்முருகன் வேதனை
சென்னை: பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மரணம், தமிழ்ச் சமூகத்திற்குப் பெருந்துயரமாக அமைந்து விட்டது என்று தமிழக வாழ்வுரி்மைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நா. முத்துக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள வேல்முருகன், பாடலாசிரியராக மட்டுமல்லாமல், இனமான உணர்வுமிக்கவராகவும் வாழ்ந்தவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
பண்ருட்டி வேல்முருகன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளதாவது:

புடம் போட்ட வைரம்
தமிழின உணர்வாளர் பாடலாசிரியர் தம்பி நா. முத்துக்குமார் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மார்ந்த இறுதி வணக்கம்! திரைப்படப் பாடலாசிரியாக அண்ணன் அறிவுமதி அவர்களின் 73, அபிபுல்லா சாலை, தியாகராயர் நகர் எனும் தமிழ் பட்டறையில் தீட்டப்பட்டு புடம்போட்ட வைரமாக ஜொலித்த தம்பி நா. முத்துக்குமார் அவர்களின் திடீர் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோனேன்.

அன்புத் தம்பி
இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள்... இன்னமும் வெளிவராத நூற்றுக்கணக்கான படங்களுக்கான பாடல்கள்... அத்தனையிலும் அன்னைத் தமிழின் அழகு வார்த்தைகளை அள்ளித் தெளித்தவர் தம்பி நா. முத்துக்குமார்...

இனமான உணர்வுமிக்கவர்
ஒரு பாடலாசிரியராக மட்டும் இல்லாமல் இனமான உணர்வுமிக்கவராக தமிழர் வாழ்வுரிமைக்கான களங்களிலும் குரல் கொடுத்தவராக திகழ்ந்த தம்பி நா. முத்துக்குமார் இன்று உடல்நலக் குறைவால் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்பது தமிழ் சமூகத்துக்கு பெருந்துயரம்.

இறுதி வணக்கம்
அன்புத் தம்பி நா. முத்துக்குமார் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் செம்மார்ந்த இறுதி வணக்கத்தைச் செலுத்தி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications