சென்னையில் ஐபிஎல் போட்டிகள் கூடாது: மீறினால் மைதானத்துக்குள் நுழைந்து போராட்டம்: வேல்முருகன்
சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது என்றும் மீறினால் போராட்ட வடிவம் பெறும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்றும் அவ்வாறு மீறினால் மைதானத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் வலுபெற்று வருகின்றன. இந்நிலையில் காவிரி விவகாரத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகத்தின் எதிர்ப்பை காட்ட, சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஐபிஎல் போட்டிகளை நேரில் சென்று காணாதீர்கள் என்று வேல்முருகன் நேற்றைய தினம் வலியுறுத்தியிருந்தார். அதுபோல் ஜேம்ஸ் வசந்தனும் போட்டிகளை நேரில் காணாமல் மைதானம் காலியாக இருந்தால் அதற்கான காரணம் உலக அளவில் சென்றடையும் என்பதால் ஐபிஎல்லை நேரில் காண்பதை புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மதுரையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறுகையில், ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்தினால் அது காவிரி பிரச்சினையை திசை திருப்பிவிடும்.
எனவே ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போராட்ட வடிவம் மாறும். ஐபிஎல் போட்டி மைதானத்துக்குள் நுழைந்து போராட்டத்தை தொடருவோம் என்றார் வேல்முருகன்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications