பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்க 10 கட்சிகள் முயற்சி
சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க 10 கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த, ஆதரவு தெரிவித்த பல கட்சிகளும் தொகுதி ஒதுக்கீடு பஞ்சாயத்தில் இரு அணிகளில் இருந்தும் விலகி இருக்கின்றன.
திமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ, ஆதித்தமிழர் கட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன. ஆனால் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டதால் இரு கட்சிகளும் திமுக அணியில் இருந்து வெளியேறிவிட்டன. எஸ்.டி.பி.ஐ. தனித்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளது.

விலகிய கட்சிகள்
அதிமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம், சேதுராமனின் மூவேந்தர் முன்னணி கழகம், பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம் மற்றும் கதிரவனின் பார்வார்டு பிளாக் ஆகியவை இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்த கட்சிகளுக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படாததால் இவை அனைத்தும் அடுத்தடுத்து அதிமுக அணியில் இருந்து வெளியேறின.

சேதுராமன்
பின்னர் மூவேந்தர் முன்னணி கழகத்தின் சேதுராமன் திடீரென திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது கூட்டணி தொடர்பாக 2 நாட்களில் அறிவிப்பதாக கூறினார். ஆனால் அவர் திமுக கூட்டணியை ஆதரிப்பதாக அறிவிக்கவில்லை.

தனித்து போட்டி...
இதேபோல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. அதில், தவாகா தனித்து போட்டியிடக் கூடும்; இதர இடங்களில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக அல்லாத கட்சிகள் ஆதரவைக் கோரினால் பரிசீலிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் புதிய திருப்பமாக திமுக, அதிமுக கூட்டணிகளில் இருந்து வெளியேறிய கட்சிகள் அனைத்தும் ஒரு கூட்டணியாக கை கோர்க்க திட்டமிட்டுள்ளன.

புதிய கூட்டணி?
ஏற்கனவே வேல்முருகன் தலைமையில் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இயங்கி வருகிறது. இந்த நிலையில் வேல்முருகன் தலைமையிலேயே புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கட்சிகள் இல்லாமல் குடந்தை அரசின் தமிழ்ப் புலிகள் கட்சி மற்றும் பல்வேறு தமிழர் இயக்கங்களும் இப்புதிய கூட்டணியில் இடம்பெற விருப்பம் தெரிவித்து வேல்முருகனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே அதிமுக, திமுக, தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 6 முனைப் போட்டி நிலவுகிறது. தற்போது 7-வது அணியாக வேல்முருகன் தலைமையில் ஒரு புதிய கூட்டணிக்கான சாத்தியங்களும் உருவாகி இருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications