அனிதாவை தற்கொலைக்கு நியாயம் கோரி மெரினா கடற்கரையில் வேல்முருகன் தலைமையில் திடீர் போராட்டம்!
அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு நியாயம் கோரி சென்னை மெரினாவில் காந்தி சிலை முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.
சென்னை : மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு மெரினாவில் காந்தி சிலை முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாணவி அனிதா தற்கொலையால் தமிழகமே போராட்டக் களமாகியுள்ளது. ஆற்றாமையும், இயலாமையும் போராட்டத்திற்கு மக்களை உந்தித் தள்ளுகிறது.

கொதித்தெழுந்துள்ள மக்கள் ஆங்காங்கே மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம் என பல வடிவங்களில் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர். இதே போன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.

காஞ்சி மக்கள் மன்றத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன், மத்திய- மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து அங்கு பதறியடித்து வந்த போலீசார் வேல்முருகன் உள்ளிட்டோரை கைது செய்து அழைத்து சென்றனர்.

கைதுக்கு முன்னர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். மருத்துவ கனவோடு இருந்த அந்த மாணவிக்கு அநீதியை இழைத்து விட்டன இந்த அரசாங்கங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications