கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி!
சென்னை: தேர்தல் முடிவுகளுக்கு பின் அதிமுகவில் ஈபிஎஸ் அணி, எஸ்.பி.வேலுமணி அணி என இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்ட நிலையில், சமரசமாகி இன்று இரு அணிகளும் ஒன்றிணைந்தன. இந்நிலையில் சபாநாயகரைச் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி வேலுமணி," அதிமுகவில் எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு மட்டுமே இது பிளவு அல்ல. எங்களின் பொதுச்செயலாளர் இபிஎஸ் தான் எனவும், சி.வி. சண்முகம் எங்களுடன் தான் இருக்கிறார் என கூறியுள்ளார்..
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அணிக்கும், எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் தரப்பிற்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குறிப்பாக, சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரம் அதிமுகவில் பெரிய பிளவை ஏற்படுத்தியது.
இதையடுத்து, எஸ்.பி. வேலுமணி தரப்பை சேர்ந்த பலரின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. மேலும், இரு அணிகளும் தனித்தனியாக சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்து ஒருவருக்கு எதிராக ஒருவர் மனு அளித்திருந்தனர்.

அதிமுக
இந்த சூழலில், கடந்த சில நாட்களாக இரு தரப்பினருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்தன. அதன் தொடர்ச்சியாக, இன்று காலை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்திற்கு எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி. வீரமணி, கே.பி. அன்பழகன், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் சென்றனர்.
இபிஎஸ் தரப்பு
அப்போது, சட்டப்பேரவையில் கொறடா உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவு அளித்ததற்கு வருத்தம் தெரிவித்து, முறைப்படி மன்னிப்பு கடிதம் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், இரு அணிகளும் மீண்டும் இணைந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை இபிஎஸ் தரப்பு கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், எஸ்.பி. வேலுமணி தரப்பு கொறடா சி. விஜயபாஸ்கரும் சந்தித்தனர்.
எஸ்பி வேலுமணி
அப்போது, இரு அணிகளும் முன்பு அளித்திருந்த புகார் மனுக்களை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி, " நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆளுங்கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை நாங்கள் எடுத்தோம். தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என எங்கள் மீது அவர்களும் அவர்கள் மீது நாங்களும் புகார் மனு கொடுத்து இருந்தோம். அந்த புகார் மனுவை இன்று இரு அணியினரும் சேர்ந்து சபாநாயகர்களிடம் மனு கொடுத்து வாபஸ் பெற்றுக் கொண்டோம். அதிமுகவில் எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு மட்டுமே இது பிளவு அல்ல.
எடப்பாடி பழனிசாமி
எங்களின் பொதுச்செயலாளர் இபிஎஸ் தான் என்று நாங்கள் அன்றும் சொல்லி இருந்தோம். அதிமுக இன்னும் நூறாண்டு காலம் இருக்க வேண்டும் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும். இந்த தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆராய வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கையாக இருந்தது. குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்திருந்தோம். கோரிக்கைகள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக பரிசிலீத்து நடவடிக்கை எடுப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சிவி சண்முகம்
நீங்கள் அனைவரும் வாருங்கள் நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து இந்த இயக்கத்தை வழி நடத்துவோம் என்று இபிஎஸ் அழைப்பு விடுத்திருந்தார். அழைப்பை ஏற்று நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்கிறோம். அதிமுக எங்களுக்கு உயிர்.. அதில் மாற்றுக் கருத்து கிடையாது நாங்கள் பதவிக்காக பிரிந்து சென்றோம் என்றெல்லாம் பரப்பப்பட்டது அது உண்மை கிடையாது. அதிமுக தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தோம். இனி நாங்கள் ஒற்றுமையாக இருந்து அவற்றை சரி செய்வோம். இனிமேல் அதிமுக வெற்றி நடை போடும். சி.வி. சண்முகம் எங்களுடன் தான் இருக்கிறார்." என்றார்.
-
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம்












Click it and Unblock the Notifications