தந்தை போட்டி போட்ட ஆர்கே நகரை லாவகமாக கைப்பற்றினார் மகன்!
தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே.நகர் என்ற தொகுதியின் பெயரை தன் படத்துக்கு தலைப்பாக பெற்றுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
சென்னை: தமிழகத்தில் பெரிதும் பேசப்பட்டு வந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் என்ற தொகுதியின் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் அந்த பெயரை தனது படத்துக்கு தலைப்பாகி உள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக இரண்டாக பிளவுபட்டதை தொடர்ந்து, எந்த அணிக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ள இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இதில் பலமுனை போட்டி நிலவிய நிலையில் அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரனும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர். இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியை எப்படியாயினும் பெற்று விட வேண்டும் என்ற அனைவரும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

தேர்தல் ஆணையம் ரத்து செய்தது
இந்நிலையில் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததை அடுத்த தமிழகம் முழுவதும் வருவாய் துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது வருமான வரித்துறையின் அறிக்கையின் படி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மக்களும் ஏமாற்றமடைந்தனர்.

புதிய படம்
இந்த தொகுதியின் பெயரை தான் தயாரிக்கும் புதிய படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளார் வெங்கட் பிரபு. ‘சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகத்தை அவரது பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனம் சார்பில் தயாரித்த வெங்கட் பிரபு, இரண்டாவது படமாக வைபவ் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க முன்வந்தார்.

ஆர்.கே.நகர் தலைப்பு
இந்த படத்துக்கு இதுவரை தலைப்பு வைக்கப்படாமலே இருந்து வந்தது. தற்போது இப்படத்திற்கு ‘ஆர்.கே.நகர்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ‘வடகறி' படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்குகிறார். வைபவுக்கு ஜோடியாக ‘சென்னை 600028' இரண்டாம் பாகத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்த சானா அல்தாப் நடிக்கிறார். சம்பத் வில்லனாக நடிக்கிறார்.

மகன் கைப்பற்றினார்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் முன்னிறுத்தப்பட்டார். தேர்தல் ரத்தானதால் அவரால் கைப்பற்ற இயலாத ஆர்.கே.நகர் தொகுதியை அவரது மகன் வெங்கட் பிரபு கைப்பற்றியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications