ஒரே நாளில் 25 செ.மீ மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?
Recommended Video

சென்னை: அக்டோபர் 7 ஆம் தேதி தமிழகத்தின் பல மாவட்டங்களில் 25 சென்டி மீட்டருக்கு மேலாக மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ரெட் அலர்ட் என்று அழைக்கப்படும் இந்த எச்சரிக்கையை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை அனுப்பியுள்ளது.
[மீண்டும் கேரளாவில் மழை.. ரெட் அலெர்ட்.. அரக்கோணத்திலிருந்து விரைந்த மீட்புப் படையினர்!]
முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அறிவுரை செய்யப்பட்டுள்ளது.

அதிதீவிர மழை
அந்த தினம் அதிதீவிர மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பேரிடர் மேலாண்மை இயக்குநர் சத்திய கோபால்
விடுத்துள்ள எச்சரிக்கையில், என்னென்ன முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நிவாரண முகாம்களை தயாராக வைத்திருக்கும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

குறைந்த நேரத்தில் அதிக மழை
குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பெய்து விட வாய்ப்பு உள்ளது என்பதால்தான் இந்த ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே அதுபோன்ற சூழ்நிலையின் போது, மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட கூடும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டி வரும்.

பாதுகாப்பு நடவடிக்கை
தேவையென்றால் தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் அனைத்து கொள்ளப்படும். மழை நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை சரியாக பின்பற்றினால் மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்பார்ப்பு
கேரளாவில் சில வாரங்கள் முன்பாக கடுமையான மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து பெரும் பகுதிகள் அழிவை சந்தித்தன. கேரளா மெல்ல மீண்டு வரும் நிலையில், இப்போது தமிழகத்திற்கு கடும் மழைக்கான எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. எனவே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications