மீண்டும் கேரளாவில் மழை.. ரெட் அலெர்ட்.. அரக்கோணத்திலிருந்து விரைந்த மீட்புப் படையினர்!
கேரளாவில் கனமழை பெய்ய தொடங்கி இருப்பதால், அங்கு பேரிடர் மீட்புப் படை விரைந்து இருக்கிறது.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை பெய்ய தொடங்கி இருப்பதால், அங்கு பேரிடர் மீட்புப் படை விரைந்து இருக்கிறது.
கேரளாவில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
கேரளாவில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் அங்கு மீட்பு படை விரைந்துள்ளது.
[ஒரே இரவு மழை.. ஊட்டியாகிப்போன சென்னை.. ஏசி ஃபேன்களுக்கு லீவு.. ஜில் மோடில் மக்கள்!!!]

பெரிய வெள்ளமும்
கேரளாவில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இன்னும் அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இன்னும் கேரளா முழுமையாக அந்த பாதிப்பில் இருந்து மீண்டும் வரவில்லை. இந்த வெள்ளம் காரணமாக 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எப்போது வரை பெய்யும்
இந்த நிலையில் தற்போது அங்கு மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. வரும் அக்டோபர் 11ம் தேதி வரை மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. ஒரே நாளில் 21 செமீ வரை அதிகபட்சம் மழை பெய்யும், குறைந்த பட்சம் 19 செமீ வரை மழை பெய்யும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது
அது மட்டுமில்லாமல் அங்கு சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது. இடுக்கி, பாலக்காடு, திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 வரை அங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது.

உதவி படை
இந்த நிலையில் கேரளாவில் கனமழை பெய்ய தொடங்கி இருப்பதால், அங்கு பேரிடர் மீட்புப் படை விரைந்து இருக்கிறது. வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதால் மீட்புப் படை விரைந்தது. அரக்கோணத்திலிருந்து மீட்புப் படையினர் காலையில் அங்கு சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications