ஒரே இரவு மழை.. ஊட்டியாகிப்போன சென்னை.. ஏசி ஃபேன்களுக்கு லீவு.. ஜில் மோடில் மக்கள்!!!
சென்னையில் ஒரே இரவு கொட்டிய மழையால் மொத்த நகரமும் ஊட்டி ரேஞ்சுக்கு மாறியுள்ளது.
Recommended Video

சென்னை: ஒரே இரவு கொட்டிய மழையால் மொத்த நகரமும் ஊட்டி ரேஞ்சுக்கு மாறியுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்லவே அச்சப்பட்டனர்.
கொளுத்திய வெயிலால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்தனர். இந்நிலையில் தென்மேற்கு பருவமழையும் விடைபெற்றது.

எதிர்பார்ப்பு
இதனால் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு எழுந்தது. வடகிழக்கு பருவமழை 29ஆம் தேதியே தொடங்குவதற்கு சாதகமான சூழல் இருப்பதாக கூறப்பட்டது.
[தொடர்ச்சியாக 5வது முறை.. மீண்டும் ஏமாற்றிய பருவமழை.. வானிலை மையம் அறிக்கை! ]

2 நாட்களாக மழை
ஆனால் இதுவரை வடகிழக்கு பருவமழை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இலங்கை வரை வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நள்ளிரவு முதல் மழை
சென்னையில் நள்ளிரவு முதல் விடிய விடிய இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை முழுவதும் சில்லென மாறியுள்ளது. மொத்த நகரம் முழுவதும் குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவி வருகிறது.

ஏசி ஃபேன்களுக்கு விடுப்பு
ஒரே இரவில் கொட்டிய மழையால் ஊட்டி போல மாறியுள்ளது சென்னை மாநகர். கூடவே குளிரும் நிலவி வருவதால் மக்கள் ஏசி, மற்றும் ஃபேன்களுக்கு விடுப்பு அளித்துள்ளனர். குளிர், மழை, காற்று என சென்னை முழு பருவமழை மோடில் உள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications