மூத்த பத்திரிகையாளர் 'மாலைமுரசு' மோகன்ராஜ் காலமானார்
மூத்த பத்திரிகையாளர் மாலை முரசு மோகன்ராஜ் காலமானார்.
சென்னை: மூத்த பத்திரிகையாளர் மாலை முரசு மோகன்ராஜ் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்டு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
மாலை முரசு நாளிதழில் செய்தியாளராக, தலைமை செய்தியாளராக நீண்டகாலம் பணியாற்றியவர் மோகன்ராஜ். 40 ஆண்டுகாலம் செய்தித் துறையில் தொடர்ந்து பணியாற்றியவர்.
தமிழகத்தின் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை பதிவு செய்தவர். சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

இளம் தலைமுறை பத்திரிகையாளர்களிடம் ஈகோ பார்க்காமல் பழகக் கூடியவர் மோகன்ராஜ். அவர்களுக்கு எப்படி செய்தி சேகரிக்க வேண்டும் என்பதை அழகாக சொல்லிக் காட்டி கற்றுக் கொடுக்கக் கூடியவர். பல செய்தியாளர்களுக்கு சிறந்த குருவாகவும் விளங்கியவர் மோகன்ராஜ்.
மோகன்ராஜ் மறைவுக்கு சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்ட் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. மோகன்ராஜ் உடல் சென்னையில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications