பொது இடத்தில் முத்தம் கொடுப்பது கலாச்சார சீர்கேடு: விஸ்வஹிந்து பரிஷத்
சென்னை: பொது இடத்தில் முத்தம் கொடுப்பது கலாச்சார சீர்கேடு என்று விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தமிழ்நாடு நிறுவன தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார்.
இதனை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:
விசுவ இந்து பரிஷத்தின் மாநில மாநாடு வருகிற ஜனவரி மாதம் 25-ந் தேதி ஓசூரில் ‘நாளை நமதே' என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இதில் சங்கராச்சாரியார் உள்பட முக்கிய பிரமுகர்கள், சைவ, வைணவ ஆச்சாரியார்கள், இளைஞர்கள் என ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டில் முக்கிய கருத்துகள் வலியுறுத்தப்படும்.
தற்போது முற்போக்கு சிந்தனை எனக்கூறிக்கொண்டு முத்தம் கொடுக்கும் போராட்டத்தை நாட்டில் அறிமுகப்படுத்தி உள்ளனர். பொது இடத்தில் பல பேர் பார்க்கும் வகையில் ஆணும், பெண்ணும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கின்றனர். இது நமது நாட்டின் கலாசாரத்தை சீரழிக்கும்.

கலாச்சார சீர்கேடு
நமது நாடு பண்பாடு, கலாசாரத்தில் சிறந்தது. பெண்களுக்கு தனி மரியாதையும், முக்கியத்துவமும் உள்ளது. இன்றைய காலத்தில் ஆணும், பெண்ணும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து போராட்டம் நடத்துவது வரவேற்கத்தக்கதல்ல என்றார்.
நடவடிக்கை தேவை
சென்னை ஐ.ஐ.டி.யிலும் இந்த போராட்டம் நடந்துள்ளது. அரசு இதில் தனி கவனம் செலுத்தி தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகம் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் முத்தம் கொடுக்கும் போராட்டத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முத்தம் கொடுக்கும் போராட்டத்தை கண்டித்து விசுவ இந்து பரிஷத் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
அன்பின் வெளிப்பாடா?
முத்த போராட்டத்தை அன்பின் வெளிப்பாடு எனவும் கருத்து கூறி உள்ளனர். இது தவறானது. அன்பின் வெளிப்பாடு என்பது கைக்கொடுக்கலாம், இரு கரங்களை கூப்பி வணக்கம் தெரிவிக்கலாம், பூச்செண்டு கொடுக்கலாம். ஆனால் ஆணும், பெண்ணும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது என்பது அன்பின் வெளிப்பாடு இல்லை. அது இனக்கவர்ச்சியே ஆகும்.
மேலைநாட்டு மோகம்
குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்பது தவறானதல்ல. ஆனால் சகோதர, சகோதரிகளோ, இளைஞர், இளம்பெண்களோ பொது இடத்தில் முத்தம் கொடுப்பது தவறானது. இந்த போராட்டம் பிற்போக்கு சிந்தனை தான். மேலை நாடுகளின் மோகம் அதிகரித்து வருவது தான் இதற்கு காரணம். தனி மனித உரிமையில் நாங்கள் தலையிடவில்லை. பொதுவான இடத்தில் தனி மனித உரிமையை அநாகரிகமாக செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications