ஜெயலலிதாவுக்கு நேரம் சரியில்லை... விஜயகாந்த்
சென்னை: ஜெயலலிதாவுக்கு நேரம் சரியில்லை. கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆகி விட்டது. எங்களது அடுத்த கட்டப் போராட்டம் குறித்து போகப் போகத் தெரியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மது விலக்கை அமல்படுத்தக் கோரி நேற்று தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் போராட்டம் நடத்தினர். மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தினர். ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி அளிக்காததால், விஜயகாந்த் உள்பட ஆயிரக்கணக்கான தேமுதிகவினர் கைது செய்யப்பட்டனர்.

அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கல்யாண மண்டபத்தில் தங்க வைத்து விட்டு இரவோடு இரவாக விடுதலை செய்து விட்டனர்.
விடுதலையான பின்னர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது எங்களது போராட்டம் வெற்றியா தோல்வியா என நீங்கள்தான் சொல்ல வேண்டும். என்னைக் கேட்டால் நான் வெற்றி என்றுதான் சொல்லுவேன். வியூகம் அமைப்பவர்கள் எதையும் முன்கூட்டியே சொல்லமாட்டார்கள். தேமுதிகவின் அடுத்தக் கட்ட போராட்டம் போக போக தெரியும்.
ஜெயலலிதாவுக்கு கெட்ட நேரம் வந்துடுச்சு. ஜெயலலிதாவுக்கு கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆயிடுச்சு. கட்சிகள் வெவ்வேறு. ஆனால் நோக்கங்களும், எண்ணங்களும் ஒன்றுதான் என்பதை மறந்துவிடக் கூடாது என்றார் விஜயகாந்த்.
முன்னதாக திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த்தை காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் வந்து சந்தித்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications