தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் வெற்றிக்காக போட்டியிடவில்லை…: உண்மையை சொன்ன நல்லகண்ணு
தூத்துக்குடி: தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் வெற்றிக்காக போட்டியிடவில்லை, கொள்கைக்காக களம் இறங்கியுள்ளது. என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறினார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மோகன்ராஜுக்கு ஆதரவாக, அக்கட்சியின் தேசிய குழு தலைவர் நல்லக்கண்ணு தூத்துக்குடியில் வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரையில்லாத திருப்புமுனையாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து 18 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்திய பொருளாதாரத்தை அந்நிய முதலாளிகளுக்கு அடகு வைத்த காங்கிரஸ் கட்சியையும், மதவாத பாஜவையும் எதிர்த்து இடதுசாரிகள் இணைந்து களம் இறங்கியுள்ளன.
தேர்தல் அறிவிப்புக்கு முன்னால் இந்திய அளவில் 14 கட்சிகள் இணைந்து 3வது அணி உருவானது. இதில் அதிமுகவும் பங்கேற்றது. மேலும், தேர்தலின் போது கம்யூனிஸ்ட்டுகளுக்கு இடம் ஒதுக்குவதாகவும் அதிமுக அறிவித்தது. ஆனால் கடைசி நேரத்தில் அதிமுகவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ், பாஜக வுடன் தொடர்புள்ள கட்சிகளுக்கும், அதிமுகவுக்கும் இடது சாரிகள் ஆதரவு அளிக்காது. திமுகவுக்கும் எங்கள் ஆதரவு கிடையாது. தமிழகத்தில் 5 முனை போட்டி என்பது தேவையற்றது.
தமிழகத்தில் இடது சாரிகள் போட்டியிடும் 18 இடங்களை தவிர்த்து, பிற இடங்களில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
மக்களுக்கும், நாட்டிற்கும் நெருக்கடி ஏற்படும் சூழ்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் இணைந்து போராடும். அந்த வகையில் தற்போது வெற்றிக்காக நாங்கள் போட்டியிடவில்லை. கொள்கைக்காக போட்டியிடுகிறோம் என்று நல்லக்கண்ணு கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications