ஷாக்! 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய 55 வயது நபர்.. அடித்தே கொன்ற உறவினர்கள்.. வைரல் வீடியோ
தென்காசி: வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த 55 வயது நபரைப் பெண் உள்பட 2 பேர் அடித்தே கொன்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூர் வேத கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபால். 55 வயதாகும் கோபால் அப்பகுதியில் பெயிண்டராக உள்ளார்.
இந்நிலையில், கடையநல்லூர் தாலுகா அலுவலகத்திற்கு எதிரே உள்ள வீட்டில் நேற்று கோபால் பெயிண்ட் அடித்துக்கொண்டு இருந்தார்.

கல்லைப் போட்டு கொலை
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவரும், அவருடைய உறவுக்கார பெண்ணும் கோபாலை வெளியே வரவழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே 2 பேரும் அங்குக் கிடந்த பெரிய கல்லை எடுத்து கோபால் தலையில் தூக்கிப் போட்டனர். பின்னர் கம்பால் சரமாரி தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

வைரல் வீடியோ
உடனே அந்த 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை அங்கிருந்த சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீஸ் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபால் உடலை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

என்ன நடந்தது
போலீசாரின் விசாரணையில் பல திடுக் தகவல்கள் தெரிய வந்தன. அதாவது கொலை செய்யப்பட்ட கோபால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 12 வயது சிறுமி தனியாக இருந்த வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்ட கோபால், சிறுமியிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

2 பேர் கைது
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் கோபாலிடம் இது குறித்து விசாரிக்கவே நேற்று வந்துள்ளனர். அப்போது பேச்சுவார்த்தை முற்றியதில் அது கைகலப்பாக வன்முறையில் முடிந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவான கொலையாளிகள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications