கூழ்வார்க்கும் திருவிழாவில் கரணம் அடித்த ஆரணி கபடி வீரர்.. மயங்கி விழுந்து உயிரிழப்பு.. வீடியோ
ஆரணி: ஆரணியில் கோயில் திருவிழாவில் கபடி பயிற்சியில் கரணம் அடிக்கும் போது கபடி வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் களத்துமேட்டுத் தெருவில் கடந்த 8ஆம் தேதி மாரியம்மன் கோயிலுக்கு கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது.
இதில் களத்துமேட்டு கே.எம்.எஸ் கபடி குழுவினர் கபடி போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கபடி வீரர் வினோத்குமார் (34) என்பவர் கரணம் அடிக்கும் பயிற்சியை மேற்கொண்டார்.

அதிர்ச்சி
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

வீடியோ வைரல்
வினோத்குமார் கரணம் அடிக்கும்போது மயங்கி விழும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வினோத் குமார் குட்டிக் கரணம் அடிக்கிறார். அடுத்து மீண்டும் தொடர் குட்டிக் கரணம் அடிக்கும் போது தலைக்குப்புற விழுந்து மயங்கிவிடுகிறார். உடனே பொதுமக்கள் ஓடி வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

என்ன காரணம்
பொதுவாக இது போன்ற சமயங்களில் ரத்தத்தின் அடர்த்தி அதிகமாக இருக்கும் என்றும் அதிக அழுத்தத்தால் ரத்தக் குழாய்கள் வெடித்திருக்கலாம் என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறி வருகிறார்கள். எனினும் வினோத்தின் இறப்பிற்கு என்ன காரணம் என தெரியவில்லை.

கடலூரில் கபடி வீரர் பலி
கடந்த மாதம் கடலூர் மாவட்டத்தில் கபடி விளையாடிக் கொண்டிருந்த வீரர் விமல் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. விமல் பண்ருட்டியை அடுத்த மானடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர். இவர் கபடி விளையாடிக் கொண்டிருந்த போது எதிரணியினர் பாய்ந்து வந்து பிடித்த போது உயிரிழந்தார்.
-
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications