உயிருக்கு ஆபத்து என உளவுத்துறை ரிப்போர்ட்.. விசிக ரவிக்குமார் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு!
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் போலீஸ் பாதுகாப்பு கேட்டு, புதுச்சேரி முதல்வரிடம் மனு அளித்துள்ளார்.
புதுச்சேரி: விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் போலீஸ் பாதுகாப்பு கேட்டு, புதுச்சேரி முதல்வரிடம் மனு அளித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார், கட்சியில் இருப்பதை போலவே எழுத்தாளராகவு உள்ளார். இவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை தெரிவித்தது. கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோர் இவரையும் கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாக கூறப்பட்டது.

அவருக்கு அடுத்ததாக எழுத்தாளர் ரவிக்குமாரை கொலை செய்ய குறி வைத்துள்ளதாக தகவல் வெளியானது. இரண்டு நாட்களுக்கு முன் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு இருந்தது.
இதனால் அவர் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த எச்சரிக்கை, விசிக கட்சியினர் இடையேயையும், மக்களிடமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் தற்போது தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ரவிக்குமார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை புதன்கிழமை இரவு சந்தித்து மனு அளித்தார். அவர் தனது தனது கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் நாராயணசாமியை சந்தித்தார்.
மனுவை பெற்ற முதல்வர் நாராயணசாமி, இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். விரைவில் எழுத்தாளர் ரவிக்குமாருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
