2000 ரூபாய் நோட்டு தடை..பண மதிப்பிழப்பை அன்றே கணித்தாரா விஜய் ஆண்டனி?
சென்னை: பிங்க் கலரில் அச்சிடப்பட்டு மத்திய ரிசர்வ் வங்கியால் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த ரூபாய் நோட்டில் மங்கல்யான் விண்கலத்தின் படம் அச்சிடப்பட்டிருக்கும். இந்த பணத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி. இந்த பணம் திரும்ப பெறப்படும் என்று அன்றே கணித்தாரா விஜய் ஆண்டனி என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் பிச்சைக்காரன் வெளியானது. இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் பிச்சைக்காரர் ஒருவர் 500 மற்றும் 1000 நோட்டுகளை தடை செய்தால் ஊழலை ஒழிக்க முடியும் என்று கூறுவார். மார்ச் மாத தொடக்கத்தில் பிச்சைக்காரன் படம் வெளியாகி வெற்றி பெற்றது.

அதே ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி அவர்களால் இந்தியா முழுவதும் 500 மற்றும் 1000 நோட்டுகள் தடை செய்யப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நாள் கணக்கில் வங்கி வாசல்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வயதானவர்களும் பணத்தை உண்டியலில் சேமித்து வைத்த இல்லத்தரசிகளும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கருப்புப் பணப் புழக்கத்தை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும். இதில் கட்டுப்பாடுகள் கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவில் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் முந்தைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக்கப்பட்டன. இந்தியாவின் மொத்த பண சுழற்சியில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளே 68 சதவீதம் உள்ளன. அதன் மதிப்பு 14 லட்சம் கோடி ரூபாய். இவற்றைப் புதிய 500, 1000 ரூபாய் தாள்களாக மாற்ற வேண்டும் என்றால், அச்சிடுவதற்கே மாதக்கணக்கில் ஆகும். அதுவே 500, 2,000 ரூபாய் நோட்டுகளாக அச்சிட்டால், 50 நாட்களுக்குள் அச்சிட்டுவிடலாம் என்ற அடிப்படையில் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டு கொண்டு வரப்பட்டது.
புதிதாக கொண்டு வரப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து தொடர்ந்து குறைந்துகொண்டே வந்தது ஏடிஎம்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை. தட்டுப்பாடு காரணமாக அவற்றை வங்கிகளில் விநியோகிப்பதைக் குறைத்துக்கொள்ள முயற்சி செய்வதே காரணம் என்று கூறப்பட்டது. புழக்கத்தில் குறைவாக இருந்தாலும் ரூ.2000 ஆயிரம் நோட்டு மீண்டும் அச்சிடப்படாது என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்து விட்டது.

இதனால், சந்தையில் அவற்றின் புழக்கம் பெருமளவில் குறைந்துவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் 6.73 லட்சம் கோடியாக இருந்தது. இது 2023, மார்ச் 31ம் தேதி 3.62 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் இது 10.80 சதவீதமாகும். இந்தத் தொகையில் பெரும்பகுதி கருப்புப் பணமாக இருக்க வாய்ப்புள்ளதாலேயே அவை வங்கிக்கு வரவில்லை என கருதப்படுகிறது. எனவே, அவற்றை வங்கிக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
இன்றைய தினம் பிச்சைக்காரன் 2 படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கள் எண்ணப்படுவதை குறியீடாக காட்டுவார்கள். இதன் மூலம் 2000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்படும் என்பதை விஜய் ஆண்டனி கணித்தாரா என்று சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொதுவாக சூர்யா படங்களில் வரும் சம்பவங்கள்தான் நிஜ வாழ்க்கையில் நடைபெறும் போது அன்றே கணித்தாரா சூர்யா என்ற கேள்வியுடன் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பதிவிடப்படும். இப்போது விஜய் ஆண்டனி படத்தில் வரும் காட்சிகள் போல நிஜ வாழ்க்கையிலும் சம்பவங்கள் நடைபெற்று வருவதை ஆச்சரியத்துடனே பார்க்கின்றனர். எது எப்படியோ பிங்க் கலர் பணத்திற்கும் இந்தியாவிற்கும் ராசியே இல்லை போல.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications