சத்தமின்றி தூத்துக்குடி வந்த விஜய்.. பலியானோர் வீட்டுக்கு பைக்கில் போய் துக்கம் விசாரித்தார்!
Recommended Video

தூத்துக்குடி: நடிகர் விஜய் சத்தமே போடாமல், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தூத்துக்குடிக்கு நள்ளிரவில் சென்று ஸ்னோலின் உள்ளிட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து துக்கம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார்.
மதுரை வந்த விஜய் அங்கிருந்து கார் மூலமாக தூத்துக்குடிக்குப் போயுள்ளார். டோல்கேட் வரை காரில் பயணித்த அவர் அதன் பின்னர் ஒரு பைக்கில் ஏறி பயணித்தார்.
யாரும் அடையாளம் கண்டு விடாதபடி முகத்தை கர்ச்சீப்பால் மூடியபடி அவர் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானோரின் வீடுகளுக்குப் போனார்.
நள்ளிரவில் விஜயம்
கிட்டத்தட்ட நள்ளிரவில் வந்த விஜய்யைப் பார்த்து குடும்பத்தினர் ஆச்சரியமடைந்தனர். எதிர்பாராத வேளையில் விஜய்யைப் பார்த்து அவர்களுக்கு சோகம் கூடி கதறி அழுதனர்.

ஸ்னோலின் வீட்டுக்கு
வாயில் துப்பாக்கியால் சுடப்பட்டு கோரமாக கொல்லப்பட்ட இளம் பெண் ஸ்னோலின், ஜான்சி, கிளாட்சன் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு போனார் விஜய். குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறிப் பேசினார் விஜய்.

தரையில் அமர்ந்து பேசினார்
விஜய்யைப் பார்த்த குடும்பத்தினர் அழுதபடி நடந்ததை விவரித்தனர். அமைதியாக அவர்களுடன் அமர்ந்து அதைக் கேட்ட விஜய் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். சேரில் உட்காருமாறு கூறியும் விஜய் மறுத்து விட்டார்.

ரூ. 1 லட்சம் நிவாரணம்
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகையையும் அவர் வழங்கினார். அதற்கான காசோலையை குடும்பத்தினரிடம் கொடுத்தபோது அவர்கள் அழுதபடி அதைப் பெற்றுக் கொண்டனர்.

காயமடைந்தோரையும் சந்திக்க திட்டம்
இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தோரைப் பார்க்கிறார் விஜய் என்று தகவல்கள் கூறியுள்ளன. இருப்பினும் அவரது பயண விவரம் குறித்துத் தெரியவில்லை.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications