தீர்ப்பு வந்த கையோடு, வைரலாகும் 2ஜி பற்றி விஜய் பேசிய டயலாக்!
Recommended Video

சென்னை: 2ஜி வழக்கில் திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவரும் விடுதலையான நிலையில், விஜய் நடித்த ஒரு திரைப்பட டயலாக் இப்போது வைரலாக சுற்றி வருகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 1.76 லட்சம் கோடி இழப்பு என முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

செல்வாக்கை சரித்தது
ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 6 வருடங்களாகவே திமுக மீது 2ஜி ஊழல் கறை சுமத்தப்பட்டே வந்தது. இதனால் தேர்தலில் அக்கட்சிக்கு ஓரளவுக்கு செல்வாக்கு சரிந்தது என்றும் சொல்ல முடியும்.

விஜய் டயலாக்
இந்த நிலையில்தான், கத்தி என்ற திரைப்படத்தில், நடிகர் விஜய், 2ஜி என்பது ஊழல் என டயலாக் பேசியிருந்தார். "2ஜின்னா என்ன.. அலைக்கற்றை.. வெறும் காற்றை வைத்து கோடி கோடியாக ஊழல் செய்யும் ஊருய்யா இது" என படத்தில் நிருபர்களிடம் தீவிர கதியில் டயலாக் பேசி அப்ளாஸ் வாங்கியிருப்பார் விஜய்.

ஜெயா டிவி வாங்கியது
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தபோது, இது ஊழல் இல்லை, வருவாய் இழப்பு என காங்கிரசை சேர்ந்த சில தலைவர்கள் கூறி வந்த நிலையில், திமுகவுக்கு இந்த வழக்கு பெரும் பின்னடைவாக இருந்த நிலையில், விஜய் இவ்வாறு பேசிய டயலாக் தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜெயா டிவி கத்தி திரைப்பட உரிமையை வாங்கி வைத்துக்கொண்டு, அவ்வப்போது இப்படத்தை ஒளிபரப்பி, திமுகவை சீண்டி வந்தது.
|
வைரலாகிறது
இந்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றம், 2ஜி ஊழல் வழக்கிலிருந்து ராசா உள்ளிட்டோரை விடுதலை செய்துள்ளது. இப்போது நெட்டிசன்கள் கத்தி திரைப்பட காட்சியை எடுத்து போட்டு வைரலாக்கி வருகிறார்கள்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications