விஜய்க்கு மெசேஜ் அனுப்பிய எடப்பாடி! நானே கிளம்பி வரேன்.. சண்முகம் வீட்டுக்கே போகும் முதல்வர்.. ஏன்?
சென்னை: அதிமுகவில் தனக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி கோஷ்டிகளுக்கு செக் வைக்கும் வகையில், தனது அணியில் 17 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தினார் எடப்பாடி.
இது, கிளர்ச்சி கோஷ்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடியை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கி, வேலுமணியை பொதுச்செயலாளராக கொண்டுவர சி.வி.சண்முகம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தாவியிருக்கிறார். இதற்காக, பெரும்பாலான மா.செ. க்களிடம் கையெழுத்து பெற்றுள்ளார் சண்முகம்.
கடந்த 5 வருசம் ஆட்சியில் இல்லை ; மேலும் 5 வருசம் ஆட்சியில் இல்லை எனில் நம்மை நம்பியுள்ள தொண்டர்கள் மெல்ல மெல்ல படிப்படியாக அதிமுகவை விட்டு விலகி தவெகவில் ஐக்கியமாகி விடுவார்கள். அதனால், விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் அதிகாரத்திற்குள் செல்லலாம். அதன் மூலம் அதிமுகவை தூக்கி நிறுத்தலாம் என்கிற யோசனையை சண்முகமும் வேலுமணியும் எடப்பாடியிடம் வலியுறுத்தினார்கள்.

அதிமுக உடைகிறது
அந்த யோசனையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவர் மீது கடும் கோபமடைந்தனர் சண்முகமும் வேலுமணியும். இதனையடுத்து, எடப்பாடியிடம் வலியுறுத்தியதையே அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் வலியுறுத்தி எடப்பாடிக்கு எதிராக அணி சேர்த்தனர்.
இதன் உண்மைத் தன்மையை புரிந்துகொண்ட அதிமுகவில் உள்ள 47 எம்.எல்.ஏ.க்களில் 35 எம்.எல்.ஏ.க்கள் சண்முகம்-வேலுமணி எடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைத்தனர். எடப்பாடி பக்கம் அவர் உட்பட 12 எம்.எல்.ஏ.க்கள் தான் இருந்தனர். இந்த 35 எம்.எல்.ஏ.க்களை வைத்து தவெகவுடன் கூட்டணி ஆதரவு பேச்சுவார்த்தை தொடங்கியது சண்முகம் - வேலுமணி அண்ட் கோ ! கட்சி தாவல் தடை சட்டம் பாயாமல் இருக்க வேண்டுமானால் 32 பேர் ஒரு அணியில் இருக்க வேண்டும். தங்களிடம் 35 பேர் இருப்பதால் துணிச்சலாக தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
துணிச்சல்
இந்த நிலையில் தான், அந்த துணிச்சலை உடைக்க சண்முகம்-வேலுமணி தரப்பில் இருந்த 5 எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார் எடப்பாடி. இதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கிறது. அந்த 17 பேரின் ஆதரவு தமக்கு இருப்பதை முதல்வர் விஜய்க்கும், எதிர் கோஷ்டிக்கும் அம்பலப்படுத்தத்தான் சட்டமன்ற பேரவை செயலாளரை சந்தித்து எடப்பாடி தரப்பினர் மனு அளித்தனர். அதாவது, சட்டமன்ற அதிமுக தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்திருக்கிறோம் ; அதை ஏற்க வேண்டும் என மனு கொடுக்கப்பட்டது.
எடப்பாடியின் இந்த் மூவ் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு போட்டியாக தங்கள் அணியில் 30 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க வேலுமணியை சட்டமன்ற அதிமுகவின் தலைவராக தேர்வு செய்து சபாநாயகரிடம் மனு அளித்தது சண்முகம் தரப்பு.
பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அந்த தரப்பை ஏற்பதுதான் சட்டம். அந்த வகையில், சண்முகம் தரப்பில் 30 எம்.எல்.ஏ. க்கள் இருப்பதால் வேலுமணியைத்தான் அதிமுக குழு தலைவராக அங்கீகரிக்க வேண்டும். ஆனால், இன்று நடக்க விருக்கும் சபாநாயகர் தேர்தலில் ஜேசிடி பிரபாகர் வெற்றிபெற்ற பிறகு அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்து அதிமுகவில் அடுத்தக்கட்ட மோதல் பகிரங்கமாக வெடிக்கும்.
ஒரு அணியாக இயங்க 32 எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லை ; அவர்களை நம்பி மோசம் போகாதீர்கள் என விஜய்க்கு மெசெஜ் சொல்லும் வகையில் எடப்பாடியின் மூவ் இருந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடியை நீக்க, அதிமுக மா.செ.க்களின் ஆதரவை பெறும் வகையில் சண்முகம் தரப்பு கையெழுத்து இயக்கம் நடத்தியிருக்கிறது.
இன்று மதியத்திற்கு மேல் பத்திரிகையாளர்களை சந்திக்கவிருக்கிறார் சி.வி. சண்முகம். அதேசமயம், அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்தித்த விஜய், எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கவில்லை. அதற்கு மாறாக சண்முகத்தை விஜய் சந்திப்பார் என்கிற தகவல் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications