நாதஸ்வரம் அவமதிப்பு: பிக்பாஸ் தயாரிப்பளர் ஆஜராக கோர்ட் உத்தரவு!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாதஸ்வரம் அவமதிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் விஜய் டிவி நிர்வாக இயக்குநர் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாதஸ்வரம் அவமதிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் விஜய் டிவி நிர்வாக இயக்குநர் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜய் டி.வி.யில், ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதலே சர்ச்சை தான். நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ஜூலி தன்னை கட்டிப்பிடிக்க ஆள் இல்லை என நடிகர் ஸ்ரீயிடம் கூறி சர்ச்சையில் சிக்கினார்.
நடிகை காயத்ரி ஓவியாவை பார்த்து சேரி பிஹேவியர் என கூறினார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு
காயத்ரி மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி பல்வேறு அமைப்புகள் இந்த நிகழ்ச்சியை தடை விதிக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினர்.

நாதஸ்வர வித்வானாக சக்தி
காயத்ரி தவறான வார்த்தைகளை பேசியதற்கும் மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் கடந்த ஜூலை 14-ந்தேதி ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சக்தி நாதஸ்வர வித்வானாக நடித்தார்.

நாதஸ்வரம் அவமதிப்பு
அப்போது, தெய்வீக இசை கருவியான நாதஸ்வரத்தை சக்தி அவமதித்ததாக கூறப்படுகிறது. அந்த நாதஸ்வரத்தை உணவு அருந்தும் மேஜையில் வைத்து அவமதித்தனர்.

எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு
மேலும் அந்த நாதஸ்வரத்தை தூக்கி போட்டு பிடித்துக் கொண்டு செயல்பட்டார். இது இசை வேளாளர் சமுதாயத்தினரின் நம்பிக்கையையும், தெய்வீக இசை கருவியான நாதஸ்வரத்தையும் அவமதிக்கும் விதமாக உள்ளது என எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

6ஆம் தேதி ஆஜராக உத்தரவு
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜய் டிவி நிர்வாக இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோர் அக்டோபர் 6ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications