பதவி தராததால் சட்டசபைக்குப் போகாமல் டிமிக்கி கொடுத்த 4 காங். எம்.எல்.ஏக்கள்

நான்கு பேரும் சத்திய மூர்த்தி பவனிலேயே இருந்தனர். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. அதில் பலருக்குப் பதவி கிடைக்கவில்லை.
இதையடுத்து மீண்டும் ஒரு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் பலர் அதிருப்தி அடைந்தனர்.
எம்.எல்.ஏக்கள் விஜயதாரணி, பிரின்ஸ், ரங்கராஜன், ஜான்ஜேக்கப் ஆகிய 4 எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கும் நிரந்தர செயற்குழு உறுப்பினர் பதவி வழங்க கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் கட்சி மேலிடம் அவர்களுக்கு செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கவில்லை. அதற்கு பதிலாக சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
இதனால் இவர்கள் அதிருப்தி அடைந்தனர். இன்று கூடிய சட்டசபைக் கூட்டத்திற்கு அவர்கள் போகாமல் சத்தியமூர்த்தி பவனில் அமர்ந்திருந்தனர். கட்சித் தலைவர் ஞானதேசிகனைச் சந்தித்து தங்களுக்கு நிரந்தர செயற்குழு உறுப்பினர் பதவி தர வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications