''நீ ஒரு போராளி''... சோனியா பாராட்டியதால் பெரும் மகிழ்ச்சியில் திளைக்கும் விஜயதாரணி
சென்னை: "நீ ஒரு போராளி" என்று டெல்லியில் சோனியா காந்தி பாராட்டியதால் குதூகலம் அடைந்துள்ளாராம் விளவங்கோடு எம்.எல்.ஏ விஜயதாரணி.
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்த விஜயதாரணிக்கும் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் ஏற்பட்ட கலகம் போலீஸ் ஸ்டேசன் வரை போனது.

டெல்லி தலைமையின் எச்சரிக்கையை அடுத்து வழக்கை வாபஸ் பெற்றாலும் கட்சி பதவியில் இருந்து கடந்த மாதம் 22ம் தேதி எம்.எல்.ஏ. விஜயதாரணி நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மூத்த காங்கிரஸ் தலைவர் மறைந்த பொன்னம்மாளின் பேத்தி எம்.ஜான்சி ராணி புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார்.
கடந்த 23ம் தேதி சட்டசபை கூடியபோது, முதல்வர் ஜெயலலிதாவை திடீரென சந்தித்து மனு கொடுத்தார் ஜெயலலிதா. இதனையடுத்து அவர் அதிமுகவிற்கு செல்ல இருப்பதாக பேசப்பட்டது.
இந்த நிலையில் தன்னிலை விளக்கம் கொடுப்பதற்காக கடந்த 3ம் தேதி காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை, விஜயதாரணி எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். அப்போது அவர், நான் காங்கிரசில் இருந்து விலக மாட்டேன். கட்சி தலைமையின் ஆதரவு எனக்கு இருக்கிறது'' என பேட்டியளித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நேற்று விஜயதாரணி எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார். அப்போது, மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்தும், அது தொடர்பான பிரச்னைகள் குறித்தும் சோனியாவிடம் விளக்கியதாக தெரிகிறது. மீண்டும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட விரும்பும் விஜயதாரணி, தனது தொகுதியான விளவங்கோட்டில் தான் செய்த பணிகள் குறித்த புகைப்படத்தையும் விஜயதாரணி காண்பித்தாராம்.
இதையடுத்து சோனியா, ''நீ ஒரு போராளி. நான் எப்போதும் உனக்கு ஆதரவாக இருப்பேன். ராகுல்காந்தியுடன் பேசி நல்ல முடிவு எடுக்கிறேன். அதுவரை தொகுதி பணியை கவனி'' என்று கூறினாராம். சோனியா காந்தி பாராட்டியதால் மகிழ்ச்சி அடைந்த விஜயதாரணி, நல்ல பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறாராம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications