லோக் ஆயுக்தா வந்தால் திமுகவினர் கூண்டோடு சிறைக்கு செல்வார்கள்.. விஜயகாந்த் பேச்சு
தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்பட்டால் முதலில் திமுகவினர் தான் சிறைக்கு செல்வார்கள் என்று விஜயகாந்த் பேசியுள்ளார்.
திருப்பூர்: அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழகத்தை நாசமாக்கி விட்டன. தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டு வரப்பட்டால் முதலில் திமுகவினர் சிறைக்கு செல்வார்கள் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் ரோட்டில் தேமுதிக சார்பில் மே தினவிழா பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தேமுதிக தலைவர் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய விஜயகாந்த், அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நமது நாட்டில் தொழிலாளர்களை யாரும் மதிப்பதில்லை. தமிழகத்தை ஆளும் அதிமுகவாக இருந்தாலும் சரி, ஆண்ட திமுகவாக இருந்தாலும் சரி, அவை தமிழகத்தை நாசமாக்கி விட்டன.
அரவை ஆலையில் இருந்து எனது வாழ்க்கையை தொழிலாளியாகத்தான் தொடங்கினேன். இன்றும் தொழிலாளர்களுக்காகவே குரல் கொடுத்து வருகிறேன். ஊழல் செய்பவர்களை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறி வருகிறார். அவ்வாறு லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்பட்டால் முதலில் திமுகவினர் தான் சிறைக்கு செல்வார்கள். அதனால் அவர்களுக்கு தான் பாதிப்பு என்று தெரிவித்தார்.
-
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications