நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்... டுவிட்டரில் விஜயகாந்த்
சென்னை: எனது விருப்பத்திற்கேற்பவே எனது மனைவி பிரேமலதா இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
வாக்காளர்களுடன் கடந்த வாரம் டுவிட்டரில் உரையாடிய விஜயகாந்த், வாக்காளர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்தவாரமும், டுவிட்டரில் வாக்காளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அவருக்கே உரிய பாணியில் பதிலளித்துள்ளார் விஜயகாந்த்.
உங்களது உடம்புக்கு என்ன? என்ற கேள்விக்கு, ''நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. என்று கூறியுள்ளார்.
அரசியல் சாராத மீடியாக்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன?, ''என்னுடைய கண்ணுக்கு எட்டிய தூரம் அப்படி ஒரு மீடியாவை பார்க்க முடியவில்லை என்று விஜயகாந்த் கூறியுள்ளார். நான் மக்களுக்கு நல்லது செய்யவே விரும்புகிறேன். நான் ஆட்சிக்கு வந்த பின்னர் பாரபட்சமாக நடந்து கொள்ளும் தொலைக்காட்சியினர் தங்களை மாற்றிக் கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா
உளுந்தூர்பேட்டையில் நீங்கள் டெபாசிட் பெற மாட்டீர்கள் என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறுகிறார்கள்? என்ற கேள்விக்கு, ''அப்படியா? என்று திரும்ப கேட்ட விஜயகாந்த், எனது விருப்பத்திற்கேற்ப என் மனைவி பிரேமலதா இந்த முறை தேர்தலில் நிற்கவில்லை என்று கூறியுள்ளார்.
|
உதவி தேவைப்படாது
எப்படி கடனில் இருக்கும் தமிழகத்தை மீட்டு எடுப்பீர்கள் என்ற கேள்விக்கு, ''சுரங்கங்கள் மற்றும் இயற்கை வளங்களை அரசே எடுத்து நடத்தும் என்று கூறியுள்ளார். அதிமுக, திமுகவின் உதவி எதற்கும் தேவைப்படாது என்றும் கூறியுள்ளார்.

ஒழுக்கம் முக்கியம்
ஏன் பொதுக் கூட்டங்களில் ஆசிரியர் போல் நடந்து கொள்கிறீர்கள்?, ''மக்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

பழிவாங்கமாட்டேன்
மக்கள் தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்களை வாழ்த்துவீர்களா?, ''களத்தில் இருப்பது ஒரே ஒரு தேமுதிக. அது எங்களுடையது என்று கூறிய விஜயகாந்த், நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் எதிர்கட்சிகளை பழிவாங்குவீர்களா? என்ற கேள்விக்கு ''இல்லை'' என்று பதில் கூறியுள்ளார்.

நல்ல திட்டம்
சேது சமுத்திரம் பற்றிய உங்களது கருத்து என்ன? என்ற கேள்விக்கு ''அது ஒரு நல்ல திட்டம்'' என்று கூறியுள்ள விஜயகாந்த்,
தமிழக மின்வாரியத்தை எப்படி கடனில் இருந்து மீட்டு எடுப்பீர்கள் ? என்று கேட்டதற்கு ''சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.
|
'எஸ்' சொன்ன விஜயகாந்த்
தண்ணீர் வளத்தை சீரழிக்கும் கோ கோ கோலா நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறதா என்று கேட்ட கேள்விக்கும் ''யெஸ்'' என்று பதில் கூறியுள்ளார் விஜயகாந்த்.
|
குடிசைகளை மாற்ற முடியும்
வறுமை கோட்டுக்கு கீழே இருக்க மக்களுக்காக என்ன நல்ல திட்டம் வெச்சிருக்கீங்க என்று கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன விஜயகாந்த், வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும். ஏழைகளையும் குடிசைகளையும் மாற்ற முடியும் என்று கூறியுள்ளார்.

வருத்தப்பட மாட்டேன்
மீண்டும் வெற்றி பெற்று வந்த பின்னர் உங்களை உங்களது எம்.எல்.ஏ.,க்கள் வஞ்சித்தால் என்ன செய்வீர்கள்? ''வருத்தப்படமாட்டேன்'' போன்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
|
நன்றி வணக்கம்
நீங்க கேட்ட கேள்வியத்தான் கேட்கறீங்க. அறிவிப்பூர்வமா கேட்டா நானும் பதில் சொல்வேன். 50 வருஷமா திமுக, அதிமுக சேர்ந்து நாட்டை குட்டிச்சுவராக்கிட்டாங்க. எங்க கூட்டணி கட்சி ஆட்சிக்கு வந்தா நிச்சயம் நல்லது செய்வோம். நன்றி வணக்கம் மக்களே என்று கூறி முடித்துக்கொண்டார் விஜயகாந்த்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications