தேமுதிக. தலைமையகத்தில் கிறிஸ்துமஸ் விழா ரத்து- மற்ற இடங்களில் ஆடம்பரம்பற்ற கொண்டாட்டம்: விஜயகாந்த்
சென்னை: மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் தே.மு.தி.க. தலைமை நிலையத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாகவும் மற்ற மாவட்டங்களில் ஆடம்பரமில்லாமல் வழக்கம் போல கேக்குகள், இனிப்புகள் வழங்கலாம் என்றும் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பகைவர் இடத்திலும் அன்பு செலுத்தி, நம்மை வெறுப்பவர்களுக்கு உதவி செய்து, புறம்பேசுவோரை வாழ்த்திடவேண்டுமென போதித்து, தன் உயிரை மக்களுக்காக தியாகம் செய்தவர் இயேசு பிரான் ஆவார். அவருடைய மார்க்கத்தை கடைபிடிக்கும் கிறிஸ்துவ மக்கள், அவர் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள்.
சாதி, மதம் என்ற பேதம் இல்லாத நிலையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, தேமுதிக தலைமை கழகத்திலும் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது.
தற்போது சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு தேமுதிக சார்பில் உதவும் விதமாக, நம்மாலான உதவியாக சுமார் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு, காய்கறிகள், போர்வை, வேஷ்டி, சேலை, பாய், குடிநீர் பாட்டில், மருந்துகள் போன்ற பல்வேறு வகையான அத்தியாவசியப் பொருட்கள், பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் நிவாரண உதவிகளாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் வெகு விமரிசையாக கிறிஸ்துமஸ் பெருவிழாவை தேமுதிக சார்பில் கொண்டாடுவது சரியாக இருக்காது என்பதை மனதில் கொண்டு, தேமுதிக தலைமை கழகத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் பெருவிழா ரத்து செய்யப்படுகிறது.
அதே சமயத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆடம்பரம் ஏதுமின்றி, ஏழை, எளியவர்களுக்கு உடைகள், பிரியாணி உணவு, கேக்குகள், இனிப்பு வகைகள் போன்ற வைகளை வழக்கம்போல் வழங்கிடவேண்டுமென தேமுதிக நிர்வாகிகளையும், தொண்டர் களையும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் சுமார் ஐந்து கோடி ரூபாய் அளவிற்கு நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வழங்கிய தேமுதிகவின் அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வார்டு, கிளைக்கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு தொண்டாற்றிய இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications