புது உத்வேகத்தில் கேப்டன் - உள்ளாட்சி இடைத் தேர்தல் குறித்து விரைவில் கட்சியினருடன் ஆலோசனை
சென்னை: உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது ஓய்வில் இருந்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். மேலும் உள்ளாட்சி இடைத் தேர்தலில் தேமுதிகவின் செயல்பாடு குறித்தும் கட்சியினருடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின்னர் தேமுதிகவினர் துவண்டு போயுள்ளனர். கட்சியால் ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாமல் போனது தேமுதிகவினரை சோர்வடைய வைத்துள்ளது.
விஜயகாந்த்துக்கும் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. முதலில் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து திரும்பியது முதல் அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.

சட்டசபைக்கு வரவில்லை:
சிகிச்சை முடிந்து திரும்பியது முதல் எந்த நிகழ்ச்சியிலும் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. சட்டசபைக்கும் அவர் போகவில்லை.

ஒரே ஒருமுறை சந்திப்பு:
கட்சி எம்.எல்.ஏக்களை ஒரே ஒருமுறை மட்டுமே சந்தித்துப் பேசினார். அவர்களுடன் சட்டசபை நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

சுதந்திர தினம் முதல்:
இந்த நிலையில் தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் சுதந்திர தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருடா வருடம் நடக்கும் விழா இது. இதில் இந்த முறை விஜயகாந்த் பங்கேற்பாரா என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் அவர் தற்போது பங்கேற்கவுள்ளதாக கூறுகிறார்கள். மேலும் அன்று முதல் புத்துணர்ச்சியுடன் அவர் செயல்படவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தீவிர ஆலோசனை:
தமிழகத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வியூகத்தை வகுக்கவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் கட்சியினருடன் முக்கிய ஆலோசனையிலும் ஈடுபடவுள்ளார்.

அதிமுகவிடமிருந்து கட்சியைக் காப்பாற்றுவாரா?:
தேமுதிகவை உடைத்து அதிலிருந்து மேலும் சில எம்.எல்.ஏக்களை அதிமுக பக்கம் இழுக்கவும் அதிமுக தரப்பிலும், அதிருப்தி தேமுதிக தரப்பிலும் சிலர் தீவிரமாக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே இதையும் முறியடிக்க வேண்டிய நிலையில் விஜயகாந்த் உள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications