ஆந்திர சிறையிலிருந்து தமிழர்கள் விடுதலை.. திமுகவை பெயர் சொல்லாமல் கண்டித்த விஜயகாந்த்!
சென்னை: வனக்காவலர்கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கில் ஆந்திர சிறையில் வாடிய தமிழர்கள் 287 பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடுவதாக திமுகவுக்கு எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டிப்பு தெரிவித்துள்ளார். அதேநேரம் திமுக என்ற பெயரை நேரடியாக கூறாமல் கண்டித்துள்ளார்.
ஆந்திர வனக்காவலர்கள் 2 பேர் 2013ம் ஆண்டு டிசம்பரில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த 287 தமிழர்கள் உள்ளிட்ட கைதிகள் நிரபராதிகள் என கூறி திருப்பதி நீதிமன்றத்தால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கிற்கு தமிழக அரசு உதவியதாக அதிமுகவும், திமுகதான் வக்கீல்களை ஏற்பாடு செய்தது என்று அந்த கட்சியும், தமிழர் விடுதலைக்கு உரிமை கொண்டாடி வருகின்றன.

ஆதாயம் தேடுகிறார்கள்
இதுகுறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள தேமுதிக தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த், "அரசியல் ரீதியாக இதில் ஆதாயம் தேடும் வகையில் பல கட்சிகள் தங்களுடைய வழக்கறிஞர்களின் முயற்சியால்தான் விடுவிக்கப்பட்டனர் என உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய யாரும் முன்வருவதில்லை" என சாடியுள்ளார்.

பெயர் இல்லை
இந்த கண்டனம் திமுகவுக்கானதுதான் என்றபோதிலும், தனது அறிக்கையில் திமுக பெயரை அவர் குறிப்பிடவில்லை. அதேநேரம், அதிமுக தலைமையின் பெயரை பயன்படுத்தி கண்டித்துள்ளார் விஜயகாந்த்.

ஜெயலலிதாவுக்கு கண்டிப்பு
"ஊடகங்கள் சில, தமிழர்களை விடுதலை செய்தது தமிழக அரசு என்பது போலவும், முதலமைச்சர் ஜெயலலிதா மட்டுமே முயற்சி எடுத்தது போலவும், அதற்கு ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லுங்கள் என்றும் வற்புறுத்துவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுப்போல் உள்ளது" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

திமுகவில் சலசலப்பு
திமுகவோடு, தேமுதிக கூட்டணி அமைக்குமா இல்லையா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக தொக்கி நிற்கிறது. இந்த நிலையில் திமுகவையும், விஜயகாந்த் கண்டித்துள்ளது திமுக தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், திமுக பெயரை பயன்படுத்தாதது, அக்கட்சியினருக்கு, கொஞ்சம் ஆறுதலை தந்துள்ளது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications