எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யட்டும்…. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சவால் விட்ட விஜயகாந்த்
திருவள்ளூர்: தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யத் தயாரா? என விஜயகாந்த் சவால் விடுத்துள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ம் சார்பில் பொன்னேரி தாலுகா, சின்னம்பேடு அஞ்சல், பெரவள்ளூர் கிராமம், பஞ்செட்டி, போரக்ஸ் நகர், சென்னை - நெல்லூர் நெடுஞ்சாலையில் (ஜி.என்.டி. ரோடு) உள்ள எல்.கே.எஸ். (ELL KAY YES) கல்யாண மண்டபத்தில் 14 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்.இன்று நடைப்பெற்றது. தேசிய முற்போக்கு திராவிடகழக தலைவர் விஜயகாந்த்இந்த திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து சிறப்புரையாற்றினார்.மேலும் மணமக்களுக்கு சீர்வரிசைகளையும் வழங்கினார்.

திருமணத்திற்கு பின்னர் செய்தியாளர்களை விஜயகாந்த் சந்தித்தார். அப்போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இன்னும் கட்சியிலிருந்து நீக்காமல் வைத்திருப்பது ஏன்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அது உள்கட்சி விவகாரம் என்றார் விஜயகாந்த்.

முடிந்தால் எங்களை கட்சியிலிருந்து நீக்கட்டும் என அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உங்களுக்கு சவால் விடுத்துள்ளனரே? என்ற கேள்விக்கு பதிலளித்த விஜயகாந்த்," அவர்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை முதலில் ராஜினாமா செய்யட்டும். அதன்பின்னர் அவர்களை கட்சியிலிருந்து நீக்குகிறேன்" என்று பதிலுக்கு சவால் விடுத்தார்.
அம்பேத்கர் 58வது நினைவுநாள் - விஜயகாந்த் அஞ்சலி
டாக்டர் அம்பேத்கரின் 58வது நினைவு நாளையொட்டி தேமுதிக சார்பில், புழல் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications