ஜெயலலிதா ஸ்ரீரங்கத்துக்கு மட்டும்தான் முதல்வரா? விஜயகாந்த் கேள்வி
சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதிக்கு மட்டும் ஜெயலலிதா முதலமைச்சரா? அல்லது 234 தொகுதிகளுக்கும் முதலமைச்சரா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சில தினங்களுக்கு முன்பு அவருடைய ஸ்ரீரங்கம் தொகுதிக்கு சென்று பல்வேறு அரசு நலத்திட்டங்களை வழங்கினார்.

அந்த நிகழ்ச்சியில், அவர் பேசும்போது, ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 5வது முறையாக வருவதாகவும், இதுவரை இத்தொகுதிக்கு 2185 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பில் 5200 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளதாகவும், 193 கோடியே 14 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்துள்ளதாகவும் சொல்லியுள்ளார்.
இதை பார்க்கும்போது, இவர் இந்த ஒரு தொகுதிக்கு மட்டும் முதலமைச்சரா? அல்லது 234 தொகுதிகளுக்கும் முதலமைச்சரா என்கின்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஓட்டு போட்டாலும், போடாவிட்டாலும் அனைவருக்கும் நீங்கள்தான் முதலமைச்சர். எனவே, அனைத்து தொகுதியிலும் இதுபோன்று மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். முதலமைச்சரின் தொகுதிக்கு செய்வதைப் போல, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு கூட செய்யப்படுவதில்லை. ஆளும் கட்சி தொகுதியே இப்படியென்றால், எதிர்க்கட்சிகளின் தொகுதிகளை பற்றி சொல்லவே தேவையில்லை.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் குடிநீர் பற்றாக்குறை, சுகாதார வசதியின்மை, மின்வெட்டு என மக்கள் அவதிப்பட்டு கொண்டுள்ளனர். இதையெல்லாம் காது கொடுத்து கேட்காமல், சுயநலத்துடன் செயல்படும் முதலமைச்சராகத்தான் ஜெயலலிதா இருக்கிறார். இந்த போக்கை அவர் மாற்றிக் கொண்டு, ஒரு தாய் எப்படி எல்லா குழந்தைகளையும் சரி சமமாக நடத்துகிறாரோ, குறும்புக்கார குழந்தையாக இருந்தாலும் எப்படி அன்பு காட்டுகிறாரோ, அதுபோல தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளையும் முதலமைச்சரின் தொகுதியாக பாவித்து அங்குள்ளவர்களுக்கும் மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக சென்றடைந்திடும் வகையில் முதலமைச்சரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications