கருவாட்டைத் தின்கின்ற எலி.. எலியைப் பிடிக்கின்ற பூனை.. விஜயகாந்த் அறிக்கை!
சென்னை: ஆவின் நிர்வாக சீர்கேடு குறித்த சந்தேகங்களையெல்லாம் தெளிவாக்கும் வகையில், தமிழக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜயகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு கடந்த முறை பால் விலை உயர்வை அறிவித்த போதே இந்த விலை உயர்வு தனியார் பால் நிறுவன முதலாளிகளுக்கு லாபம் தரும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ளதோ என்று ஐயப்பாடு ஏற்படுகிறது என்று தெரிவித்து இருந்தேன்.
இதனிடையே பொதுமக்கள் சிலரிடம் இருந்து எனக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது பாலின் கொள்முதல் விலையை ஆவின் உயர்த்தியபோதும் தனியார் பால் நிறுவனங்கள் உயர்த்தாமால் பால் உற்பத்தியாளரிடம் இருந்து ஒரு லிட்டர் 22 ரூபாய் என்று வாங்கி அதை ஒரு லிட்டருக்கு 26 ரூபாய் என்று ஆவின் நிறுவனத்திற்கு விற்பதன் மூலம் ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் சாதரணமாக லாபம் சம்பாதித்து விடுவதாகவும், தனியாரிடம் இருந்து வாங்கும் பாலின் தரம் குறைந்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே உயர்நீதிமன்றம் ஒருசில தனியார் நிறுவன பாலின் தரம் போதுமானதாக இல்லையென்று சுட்டிக்காட்டி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டு உண்மையோ என்று எண்ணும் விதத்தில் இதுவரை இல்லாதவகையில் மிக குறுகிய காலத்திலேயே ஆவின் பால் கொள்முதல் அளவு சுமார் 1,50,000 லிட்டர் கூடியுள்ளதாகவும், அது இன்னும் அதிகரிக்கும் என்றும் அறிக்கை வந்துள்ளது.
இதோடு ஆவின் நிறுவனத்தை பராமரிக்க ஒரு ஆணையரும் (Commisioner), ஆவின் நிர்வாகத்தை கவனித்துக்கொள்ள ஒரு நிர்வாக இயக்குனரும் (Managing Director) இருக்க வேண்டும். அதாவது ஆவின் நிர்வாகத்தை சரியாக நடத்தவேண்டியவர் நிர்வாக இயக்குனர் (M.D). நிர்வாகம் சரியில்லை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டியவர் ஆணையாளர் (Commisioner). ஆனால் ஆவின் நிறுவனத்தில் இருவரும் ஒருவரே.
தற்போது ஆவின் நிர்வாக சீர்கேட்டை சரிபடுத்த முடியாமல் போனதற்கு காரணம், கருவாட்டை தின்கின்ற எலியே, அந்த எலியை பிடிக்கின்ற பூனையாகவும் இருக்கின்ற வினோதமான சூழ்நிலைதான்.
எனவே ஆவின் நிர்வாகம் குறித்தும் கொள்முதல் மற்றும் விற்பனையில் தனியார் லாபம் ஈட்டும் நோக்கம் குறித்தும் ஆவினில் நடைபெறும் ஊழல் மற்றும் கலப்படம் குறித்தும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை போக்கும் வகையில் இந்த அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications