அதிமுக வெற்றிக்காக ரூ700 கோடி வாங்கிய விஜயகாந்த்... சந்திரகுமார் பகீர் தகவல்
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக ரூ700 கோடி வாங்கி 60 லட்சம் தொண்டர்களின் வாழ்வையே சீரழித்துவிட்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் என மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டசபை தேர்லில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.ஹெச்.சேகர் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி மக்கள் தேமுதிகவை தொடங்கி திமுக கூட்டணியில் இடம்பெற்றனர்.
மக்கள் தேமுதிக 3 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. இந்த நிலையில் மக்கள் தேமுதிகவின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

திமுகவில் கூண்டோடு இணைப்பு
இந்த கூட்டத்தில் மக்கள் தேமுதிகவை கலைத்துவிட்டு கூண்டோடு திமுகவுடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் சந்திரகுமார் கூறியதாவது:

60 லட்சம் தொண்டர்கள் வாழ்வு சீரழிவு
எங்களை விஜயகாந்த் கடனாளியாக்கி விட்டு தன்னை வளமாக்கி விட்டார். 60 லட்சம் தொண்டர்களின் வாழ்வை சீரழித்துவிட்டார். விஜயகாந்தின் சுயநலத்திற்காக தொண்டர்கள் வீட்டையும் இழந்து, நடுத் தெருவுக்கு வந்து விட்டார்கள்.

தேமுதிக இருக்காது
தமிழகத்தில் அதிமுக, திமுகவை தவிர வேறு கட்சிகளை மக்கள் ஏற்கவில்லை. இதை இந்த தேர்தல் நிரூபித்து இருக்கிறது. 10% இருந்த வாக்கு வங்கியை விஜயகாந்த் வெறும் 2.4% ஆக்கிவிட்டார். அவர் போட்டியிட்ட தொகுதியில் டெபாசிட் கூட அவரால் வாங்க முடியவில்லை. மக்கள் விஜயகாந்தை நிராகரித்து விட்டனர். அடுத்த தேர்தலில் தேமுதிக இருக்காது.

மா.செ.க்களுக்கு என்ன பதில்?
தன்னுடைய வீட்டில் உள்ளவர்களையே விஜயகாந்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்றைக்கு 14 மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்திற்கு உருக்கமாக கடிதம் எழுதியிருக்கிறார்கள். இதற்கு விஜயகாந்த் என்ன பதில் சொல்லப்போகிறார்.

ரூ700 கோடி....
எல்லாம் தெரிந்தும் அதிமுக வெற்றிக்கு அவர் வழி வகுத்தது ஏன்? அவருக்கும் 700 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. அதனால் கட்சியை கைக்கழுவிவிட்டார்.
நாங்கள் எங்கள் அமைப்பின் தீர்மானத்தை திமுக தலைவர் கருணாநிதியிடம் காட்டி, திமுகவில் சேர விருப்பத்தை தெரிவிப்போம். அதன்பிறகு ஒரு மாநாட்டை நடத்தி, திமுகவில் இணைவோம்.
இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்











Click it and Unblock the Notifications