மெளனமாக இருந்து புரட்சி செய்து விட்டார்கள் மக்கள்.. விஜயகாந்த்
சென்னை: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் பாஜக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பாரதிய ஜனதாகட்சி அமோக வெற்றி பெற்றதற்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் வெற்றியின் மூலம் இந்திய மக்கள் எதிர்பார்த்த ஆட்சிமாற்றத்தை பாரதிய ஜனதாகட்சி ஏற்படுத்தி உள்ளது. தற்போது மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில மக்களும் ஆட்சிமாற்றத்தை விரும்பியே வெற்றி பெற செய்துள்ளார்கள் பாராளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட மௌன புரட்சியை போல் தற்போதும் மக்கள் மௌனமாக இருந்து மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்கள்.
இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமான பாரத பிரதமர் நரேந்திரமோடிக்கும், பாரதிய ஜனதாகட்சியின் தலைவர் அமித்ஷாவுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications