கருப்பு பணத்தை கோடிக்கணக்கில் பதுக்கியோருக்கு மோடியின் அறிவிப்பு பேரிடி: விஜயகாந்த்
ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பை விஜயகாந்த் வரவேற்றுள்ளார்.
சென்னை: கருப்பு பணத்தை கோடிக்கணக்கில் பதுக்கியோருக்கு ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு பேரிடியாகத்தான் இருக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் கூறியுள்ளதாவது:
நள்ளிரவு முதல் ரூ. 500 மற்றும் ரூ. 1000 செல்லாது என்று மோடி அறிவித்தது மிகவும் வரவேற்கத்தக்கது.

இந்த நடவடிக்கை லஞ்சம், ஊழல், கருப்பு பணத்தை ஒழிக்க மிகப்பெரிய உதவி செய்யும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, இந்த நடவடிக்கையை நான் மனதார வரவேற்கிறேன்.
சாமான்ய மக்களுக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் லஞ்சம், ஊழல், மற்றும் கருப்பு பணத்தை கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருப்பவா்களுக்கு, இந்த அறிவிப்பு போிடியாக இருக்கும்.
தொலைநோக்குப் பாா்வையில் மோடி அவா்களின் இந்த அறிவிப்பு, இந்தியாவிற்கே ஒரு வரப்பிரசாதமாக இருக்கும், மேலும் நம் நாட்டை வல்லரசாக மாற்ற இந்த அறிவிப்பு பெரும் உதவி செய்யும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications