ஏன் தோற்றோம்?.. கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் இன்று முதல் 2வது கட்ட ஆலோசனை!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் தோல்வி தொடர்பாக கட்சியின் உள்ளாட்சி நிர்வாகிகளுடன் இன்று முதல் 20ம் தேதி வரை ஆலோசனை நடத்துகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி, தமாகவுடன் கடைசி நேரத்தில் கூட்டணி வைத்து 104 தொகுதிகளில் போட்டியிட்டு 104 தொகுதிகளிலும் படு தோல்வியைத் தழுவியது தேமுதிக. இதில் விஜயகாந்த்துக்கே டெபாசிட் பறிபோய் பெரும் கேவலமான நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த நிலையில் தேர்தல் தோல்வி குறித்து கடந்த மே 23ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் ஆகியோரை நேரில் வரவழைத்து ஆலோசனை நடத்தினார் விஜயகாந்த். அப்போது கூட்டணி சரியாக அமையாமல் போனதால்தான் தோற்றோம் என்று பெரும்பாலானவர்கள் கூறினர். திமுக கூட்டணியில் நாம் சேர்ந்திருக்க வேண்டும் என்றும் பலரும் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் முதல் முறையாக சமீபத்தில் வெளியே வந்த விஜயகாந்த் தனது மனைவியுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில் பீனிக்ஸ் பறவை போல எழுந்து வருவேன் என்றும் விஜயகாந்த் கூறினார். இந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட ஆலோசனையில் விஜயகாந்த் இறங்கியுள்ளார்.
இன்று முதல் 20ம் தேதி வரை கட்சியின் உள்ளாட்சி அளவிலான அதாவத ஊராட்சி, ஒன்றிய, பகுதி, வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்திலும் நாம் ஏன் தோற்றோம், என்ன செய்திருக்க வேண்டும், என்ன செய்யத் தவறினோம் என்பது உள்ளிட்டவை குறித்து கருத்து கேட்கிறார் விஜயகாந்த். கூட்டத்திற்குப் பின்னர் அவர் தனது அடுத்த கட்ட உத்திகள் குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் குறித்த உத்திகளையும், திட்டங்களையும் அவர் அறிவிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications