செயற்குழு உறுப்பினர்களுடன் விஜயகாந்த் முக்கிய ஆலோசனை.. கூட்டணி குறித்து முடிவு?
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் மக்கள் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
தமிழக சட்டசபைக்கு தேர்தல் நெருங்கி வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே தேர்தல் வரும் வாய்ப்புகள் உள்ளன. முன்கூட்டியே வந்தாலும் வரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இதை மனதில் கொண்டு ஒரு பக்கம் மக்களுக்காக போராட்டங்களை நடத்திக் கொண்டு மறுபக்கம் கூட்டணிக்காக முக்கிய கட்சிகள் போராடிக் கொண்டுள்ளன.
அதிமுக முதல் குட்டிக் கட்சிகள் வரை அத்தனை பேருமே கூட்டணிக்காக அலைபாய்ந்து கொண்டுள்ளனர்.

அதிமுக - பாஜக
அதிமுகவைப் பொறுத்தவரை சில குட்டிக் கட்சிகளை வழக்கம் போல இணைத்துக் கொண்டு முக்கியக் கூட்டணியை பாஜகவுடன் வைக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

திமுக நிலைப்பாடு
திமுக நிலைப்பாடு தெளிவாகவில்லை. ஆனால் அக்கட்சியும் வலுவான கூட்டணியை அமைக்கவே முயன்று வருகிறது. இதற்காக சில பல விட்டுக் கொடுத்தல்களுக்கும் அது தயாராக உள்ளது.

காங்கிரஸ்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இணையலாம் என்று தெரிகிறது. மதிமுகவும் கூட போகலாம்.

தேமுதிக
தேமுதிக நிலைப்பாடு தெளிவாகவே இல்லை. பாஜக கூட்டணியில் தேமுதிகவால் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. எனவே அது வேறு கூட்டணிக்கு மாற வேண்டிய நிலை.

வேறு வழியில்லாமல் திமுகவிடம் போக நேரிடலாம்
வேறு வழியில்லாமல் அது திமுகவுடனேயே கூட்டணி அமைக்கும் நிலை வரும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். அதுதான் தேமுதிகவின் எதிர்காலத்துக்கு நல்லது என்பது அவர்களது கருத்தாகும்.

செயற்குழுக் கூட்டம்
இந்த நிலையில் இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழுவைக் கூட்டினார் விஜயகாந்த். இக்கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாம்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications